பயங்கரவாதக் கும்பல் கை து முதல் புதியமெட்ரோ வழித்தடம் வரை ; அமீரகத்தின்இந்த வார முக்கிய செ ய்திகள்!

மாணவர்களுக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து

அமீரகத்தில் ஏப்.20, 2026 முதல் பள்ளிகள், நர்சரிகள், கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள்தொடங்கிய நிலையில், மாணவர்களுக்கு துபாய் ஆட்சியாளர் மாண்புமிகுஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “கற்பித்தல் பணிகளைத்தொய்வின்றித் தொடர முடியும் என்பதை நமது கல்விமுறைநிரூபித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று நமது பள்ளிகளிலும்பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மீண்டும் நேரடியாகத் தங்கள்கல்வியைத் தொடங்குகின்றனர்.

மாணவச் செல்வங்களே, உங்களுக்கான எனது செய்தி இதுதான்: சவால்களைக் கண்டு திகைத்து நிற்கும் தேசம் அல்ல நாம்.கற்றலையும் கற்பித்தலையும் ஒருபோதும் கைவிடாத தேசம் நாம். நமதுபயணம் என்றும் ஓயாது; நமது வளர்ச்சி ஒருபோதும் தடைபடாது.இந்தத் தேசம் உங்களைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. உங்கள்மூலமாகவும், உங்களுடனும், உங்களுக்காகவுமே இந்தத் தேசம் தனதுஎதிர்காலத்தைக் கட்டமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

துபாய் காவல்துறைக்கு பாராட்டு

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஃபெடெரிகோ மேக்கே என்ற கண்டெண்ட்கிரியேட்டர், துபாயில் இரண்டு பாஸ்போர்ட்கள், ஒரு ஐபோன், பணம்மற்றும் பிற பொருட்கள் இருந்த தனது பையை டாக்ஸியில்தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து,கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவரது பையை துபாய் காவல்துறை 4 மணி நேரத்திற்குள் மீட்டது.இது குறித்து அவர், “என்னால் நடந்ததை நம்பவே முடியவில்லை. 2பாஸ்போர்ட்டுகள், ஒரு ஐபோன், பணம் மற்றும் சில பொருட்களைவைத்திருந்த எனது பையை ஒரு டாக்ஸியில் மறந்து விட்டுவிட்டேன்.

நான் காவல்துறைக்குச் சென்றதும், அவர்கள் கேமராக்களைச் சோதித்து,டாக்ஸி டிரைவரைத் தொடர்பு கொண்டு, அடுத்த 4 மணி நேரத்திற்குள்எனது அனைத்துப் பொருட்களையும் என்னிடம் ஒப்படைத்தனர். இதுவே அர்ஜென்டினாவில் நடந்திருந்தால், நான் யாரிடம் முறையிடுவதுஎன்றே தெரிந்திருக்காது.

ஊடகங்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிஎன்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாலும், உலகின் பாதுகாப்பானநகரம் என்ற வாக்கியத்திற்கு சிறந்த உதாரணம் துபாய் தான். துபாய் காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்தச் சம்பவத்தைநான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதக் கும்பல் கைது

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் திட்டமிட்ட ஈரானுடன்தொடர்புடைய 27 பேர் கொண்ட பயங்கரவாதக் கும்பலை கைதுசெய்துள்ளதாக அமீரக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.கைதான 27 நபர்கள் ஈரானின் ‘விலாயத் அல்-பகிஹ்’ (Wilayat al-Faqih)கொள்கையோடு தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில்தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து ஈரானின் முன்னாள் உச்ச தலைவர்ஆயதுல்லா அலி கமேனி தொடர்பான புத்தகங்கள், புகைப்படங்கள்,ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள், ஒரு ட்ரோன்,ரிமோட் கண்ட்ரோல் மற்றும் மின்னணுகருவிகள் மற்றும் பெரும் தொகைஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தூதரக சேவைகளை இனி அல்ஹிந்த் நிறுவனம் வழங்கும்

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாசேவைகளை வழங்க அல்ஹிந்த் நிறுவனம் புதிய ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது. இதுவரை சேவைகளை வழங்கி வந்த BLS நிறுவனத்திற்குப்பதிலாக இனி அல்ஹிந்த் நிறுவனம் செயல்படும்.

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசாசேவைகளை பல ஆண்டுகளாக பி.எல்.எஸ் நிறுவனம் வழங்கி வந்தநிலையில், 2025 நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரில்குறைந்த ஏலத் தொகையை சமர்ப்பித்த அல்ஹிந்த் (M/s Alhind Tours &Travels Pvt Ltd) நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 60 நாட்களுக்குள் தேவையான ஏற்பாடுகளை முடித்த பிறகுஅல்ஹிந்த் தனது சேவையைத் தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசாசெயலாக்கம், ஓ.சி.ஐ கார்டுகள் உள்ளிட்ட எல்லா சேவைகளுக்கும்தூதரகத்தின் கட்டாய கட்டணத்துடன் கூடுதலாக AED 19சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதிய மெட்ரோ வழித்தடம்

துபாயில் 42 கி.மீ. நீளத்திற்கு 18 நிலையங்களுடன் ‘கோல்டன் லைன்’என்ற புதிய மெட்ரோ வழித்தடத்தை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகுஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் செப்.9, 2032 அன்று நிறைவடையும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.துபாயின் Historic Center ஆன Al Ghubaiba முதல் Jumeirah Golf Estates வரை 42கி.மீ. நீளமும் 18 நிலையங்களும் கொண்ட ‘கோல்டன் லைன்’ என்ற புதியமெட்ரோ வழித்தடத்தை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமதுபின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக AED 34 பில்லியன் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. முழுவதும் நிலத்தடியில் அமையவுள்ள இந்தமெட்ரோ வழித்தடம் 2032ஆம் ஆண்டில் நிறைவு பெறும் வகையில்திட்டமிடப்பட்டுள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் இந்த வழித்தடம் சுமார் 1.5 மில்லியன்குடியிருப்பாளர்களுக்கு சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: