ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் 40 நாள் போர்; இதுவரை பலியானவர்கள்!

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் தொடங்கிய   போரில், மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஏப்ரல் 8 அன்று ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்ட இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மோதல்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான்

ஈரான் முழுவதும் போரின் போது 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானின் தடயவியல் துறைத் தலைவர்  தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழுவான HRANA, போர் வெடித்ததில் இருந்து 3,636 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இதில் 254 குழந்தைகள் உட்பட 1,701 பேர் பொதுமக்கள் என அக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும், மார்ச் 4 அன்று இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான்

இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் குறைந்தது 1,830 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த 3 இந்தோனேசிய வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்

ஷியா போராளிகள், குர்திஷ் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்: 

ஈரான் மற்றும் லெபனான் ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் லெபனான் எல்லையில் நடந்த போரில் 12 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா: 

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம்: 

ஈரானின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கத்தார்: 

ஹெலிகாப்டர் விபத்தில் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியா: 

ஏவுகணை மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவைத்: 

7 பேர் உயிரிழப்பு.

மேற்கு கரை (West Bank): 

ஈரானின் ஏவுகணை தாக்கி 4 பாலஸ்தீன பெண்கள் உயிரிழப்பு.

சிரியா: 

4 பேர் உயிரிழப்பு.

பஹ்ரைன்:

2 பேர் உயிரிழப்பு.