🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

 இந்தியப்பெண்ணை மீட்ட தூதரகம் 

வீட்டு வேலைக்காக துபாய் வந்த இந்தியப் பெண், பாஸ்போர்ட் இன்றி, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல்  தவித்துவருவதாக வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகம் அவரை மீட்டு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல்,  ஊருக்கு அனுப்பப்படாமல் தவித்த ஒடிசாவைச் சேர்ந்த ஹஸ்தா மகாநந்தா என்ற பெண், முகநூலில் வெளியிட்ட வீடியோ மூலம் மீட்கப்பட்டுள்ளார்.

ஒடிசா உயர் நீதிமன்றம் மற்றும் துபாய் இந்தியத் தூதரகத்தின் அதிரடி முயற்சியால் அவர் மீட்கப்பட்டார்.  தற்போது தூதரகம் வழங்கிய இலவச விமான டிக்கெட் மூலம், அவர் இந்தியாவில் உள்ள தனது 3 மகள்களைக் காண மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

 தனியார் துறை ஊழியர்களுக்கு AED 100K பரிசு

தனியார் துறை ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில், Emirates Labour Market என்ற விருதை MoHRE அறிவித்துள்ளது. இதில் தேர்வாகும் சிறந்த ஊழியர்களுக்கு AED 100,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அமீரகத்தின் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MoHRE), தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் Emirates Labour Market விருதை அறிவித்துள்ளது.

இந்த விருதின் கீழ் தேர்வு செய்யப்படும் சிறந்த தொழிலாளர்களுக்கு AED 100,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு !

எமிரேட்ஸ் சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த 7 பேர்களில் பலர் இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு  இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள எமிரேட்ஸ் சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 9 பேரில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

4 பேர் நடுத்தரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயில் உள்ள இந்திய தூதரகம், காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு AED 1 மில்லியன் மற்றும் காயமடைந்தவர்களுக்கு AED 180K  வழங்கப்படும் என Burjeel Holdings குழுமத் தலைவர் டாக்டர் ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக AED 50,000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லாட்டரியில் AED 30 மில்லியன் வென்ற செக்யூரிட்டி !

செக்யூரிட்டியாக பணிபுரியும் நேபாளத்தை சேர்ந்த ஒருவர், நண்பர்களுடன் சேர்ந்து வாங்கிய UAE லாட்டரியில் AED 30 மில்லியன் வென்றுள்ளார். இதில் தனது பங்கில் ஒரு வீடு, மஹிந்திரா தார் மற்றும் ரோலக்ஸ் வாட்ச் வாங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் செக்யூரிட்டியாக பணிபுரியும் நேபாளத்தை சேர்ந்த 26 வயதான தாயப் கான், தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து வாங்கிய அமீரக லாட்டரியில் AED 30 மில்லியன் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

இந்த பரிசு தொகையை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ள அவர், தனது பங்கில் தாய்நாட்டில் ஒரு வீடு, ஒரு மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

TAGGED: