எரிபொருள் விலை உயர்வு முதல் Flydubai பயணிகளை காத்த இந்திய விமானி வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

Flydubai பயணிகளை காத்த இந்திய விமானி 

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற Flydubai FZ1073 விமானத்தில், துணை விமானி திடீரென தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சாரைக் கத்தியால் தாக்கியதால், 33,000 அடி உயரத்தில் பறந்த விமானம் 2 நிமிடங்களில் 17,000 அடிக்கு வேகமாகச் சரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உடனே சாமர்த்தியமாகச் செயல்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகள் தாக்குதல் நடத்தியவரைக் கட்டிப்போட்ட நிலையில், காயமடைந்த நிலையிலும் மன உறுதியுடன் செயல்பட்ட விமானி ஸ்மித் மச்சார் 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளுடன் விமானத்தைச் சவூதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அவரது வீரமிக்கச் செயலைப் பாராட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல தலைவர்கள் அவரை “Hero” எனக் புகழ்ந்துள்ளனர்.  

துணை விமானி தலைமை விமானியைத் தாக்கிய சம்பவம் ஒரு திட்டமிட்ட பயங்கரவாத முயற்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமீரக அரசு தெரிவித்துள்ளது.

“நான் குடித்த மிகச்சிறந்த கராக் டீ…” – அதிபர் பாராட்டு

துபாயின் முதல் Etihad ரயிலின் முன்னோட்ட பயணம் செப்.29 நடைபெற்றது. அதில், அமீரக அதிபர் பயணித்தார். அப்போது ரயிலில் எமிராட்டி சமையல் கலைஞராக பணியாற்றும் Maitha Warshaw வழங்கிய காரக் டீயைக் குடித்த அதிபர், “நான் இதுவரை குடித்ததிலேயே மிகச்சிறந்த காரக் டீ இதுதான்” எனப் பாராட்டினார்.

எரிபொருள் விலை உயர்வு 

அமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, அக்டோபர் மாதத்தில் பல்வேறு எரிபொருட்களின் விலை நிலவரம் (லிட்டருக்கு):

சூப்பர் 98 (Super 98): செப்டம்பர் மாதம் AED 3.80-க்கு விற்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் AED 4.40 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெஷல் 95 (Special 95): செப்டம்பர் மாதம் AED 3.69-க்கு விற்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் AED 4.28 ஆக உயர்ந்துள்ளது.

ஈ-பிளஸ் 91 (E-Plus 91): செப்டம்பர் மாதம் AED 3.61-க்கு விற்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் AED 4.21 ஆக உயர்ந்துள்ளது.

டீசல் (Diesel): செப்டம்பர் மாதம் AED 4.30-க்கு விற்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் AED 4.80 ஆக உயர்ந்துள்ளது.

டிக்கெட்டுடன் Free Pass!

எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு Return Trip முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, AED 535 மதிப்பிலான Complimentary Attraction Passes வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையின் மூலம் Atlantis Aquaventure Waterpark, Lost World Aquarium மற்றும் Dubai City Sightseeing ஆகியவற்றிற்கு இலவசமாகச் செல்ல முடியும்.

ஒரே பாஸ்…  எல்லா பொது போக்குவரத்திலும் பயணிக்கலாம்

அமீரகத்தில் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில், எதிஹாத் இரயில் (Etihad Rail) டிக்கெட்டுடன் துபாயின் ‘நோல் ஒன்-டே பாஸ்’ (Nol One-Day Pass) முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பான ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம், பயணிகள் ஒரே ஒரு QR Code பயன்படுத்தி எதிஹாத் இரயில், துபாய் மெட்ரோ (Dubai Metro), டிராம் (Tram) மற்றும் பேருந்துகளில் (Buses) தங்குதடையின்றி பயணிக்க முடியும்.

கட்டண விவரங்கள்:

Regular Nol One-Day Pass: AED 22

Gold Nol One-Day Pass: AED 42

ஒரே டிக்கெட்டில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை அணுகும் வசதி.

இந்த பாஸை வாங்கிய தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

TAGGED: