எதிஹாத் ரயில்; துபாயில் Nol One-Day Pass அறிமுகம்; ஒரே சீட்டில் மெட்ரோ, பஸ், டிராமில் பயணிக்கலாம்!

துபாயில் எதிஹாத் ரயில் (Etihad Rail) பயணிகள் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பயணிகள் Etihad ரயில் டிக்கெட் உடன், Nol One-Day பாஸை முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு QR Code மூலம் Etihad ரயிலுடன் சேர்த்து துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகளில் பயணிக்கலாம்.  

Nol One-Day Pass: 

இனி எதிஹாத் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும்போதே, துபாயின் உள்ளூர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான ‘Nol One-Day Pass’ சேவையையும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே QR கோடு – எளிமையான பயணம்!

பயணிகள் எதிஹாத் ரயில் டிக்கெட் மற்றும் துபாய் போக்குவரத்துக்கான Nol Pass ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரே ஒரு QR Code பெற்றுக் கொள்ளலாம். இந்த QR கோடு எதிஹாத் ரயில் செயலி மற்றும் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.

துபாயின் அல் யாலாயிஸ் (Al Yalayis) எதிஹாத் ரயில் நிலையம், சிவப்பு வழித்தடத்தில் உள்ள ‘ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ்’ (Jumeirah Golf Estates) மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் மிக எளிதாக இறங்கி துபாய் பொதுப் போக்குவரத்திற்கு மாற முடியும்.

கட்டண விபரம்

முன்பதிவு தளத்தில் இரண்டு வகையான Nol One-Day Pass விருப்பங்கள் வழங்கப்படுகின்றன:

சாதாரண பாஸ் (Regular Pass): AED 22 

கோல்ட் பாஸ் (Gold Pass): AED 42  

‘Gold Pass’ வைத்திருப்பவர்கள் துபாய் மெட்ரோ மற்றும் டிராமில் உள்ள சொகுசு வசதி கொண்ட முதன்மை வகுப்பில் (Gold Cabin) பயணிக்கலாம். எதிஹாத் ரயிலில் ‘Comfort Class’ டிக்கெட் எடுத்த பயணிகள் கூட துபாய் உள்ளூர் பயணத்திற்கு ‘Gold Nol Pass’ தேர்வு செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் செல்லுபடியாகும்?

இந்த ஒரு நாள் பயண அட்டையைக் கொண்டு 

துபாய் மெட்ரோ (Red & Green Lines), துபாய் ட்ராம் (Dubai Tram), 

RTA நகரப் பேருந்துகள் (Public Buses)

இந்த Nol Pass வாங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும். ரயில் பயணிக்கும் அதே நாளில் தான் இந்த பாஸைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாங்கிய 90 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் பயனாளி இதைச் செயல்படுத்தி (Activate) அன்றைய நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.

ஒருவேளை திட்டமிட்டபடி எதிஹாத் ரயிலில் பயணிக்க முடியாவிட்டாலும், இந்த Nol Pass-க்கான பணம் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அந்த பாஸை அடுத்த 90 நாட்களுக்குள் வேறு நாட்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முன்பதிவு செய்வது எப்படி?

பயணிகள் எதிஹாத் ரயில் தளத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்துவதற்கு முன், ‘End-to-End Journey Options’ பிரிவில் சென்று Nol One-Day Pass-ஐத் தேர்வு செய்யலாம்.

மேலும், RTA-வின் Nol Pay அல்லது S’hail செயலிகள் வழியாகவும் எதிஹாத் ரயில் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து இந்த இணைந்த சேவையைப் பெற முடியும்.

TAGGED: