Polycythemia Vera இரத்தக் கோளாறு: ‘MIMRYLO’ மருந்துக்கு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!

Polycythemia Vera நோயாளிகளுக்கான புதிய ‘MIMRYLO – Rusfertide’ மருந்துக்கு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரிய வகை ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், உடலில் அளவுக்கு அதிகமாக ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தும் ‘MIMRYLO – Rusfertide’ என்ற புதிய மருந்துக்கு அமீரக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (EDE) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

 Polycythemia Vera’ எனப்படும் அரிய வகை ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

Polycythemia Vera எனும் நோய் 

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ரத்தத்தின் சிவப்பணுக்கள் (Red Blood Cells) அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும். இதனால் ரத்தம் தடிமனாகி, அபாயகரமான ரத்த உறைவு (Blood Clots) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அமீரக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (EDE) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ‘மிம்ரிலோ’ மருந்து உடலின் மிகையான சிவப்பணு உற்பத்தியைச் சீராக்கி, ரத்தத்தின் அளவை பாதுகாப்பான வரம்பிற்குள் பராமரிக்க உதவுகிறது.

உலக அளவில் இந்த மருந்திற்கு ஒப்புதல் அளித்த 2வது நாடு என்ற பெருமையை அமீரா பெற்றுள்ளது.