75% வரை தள்ளுபடி வழங்கும் புத்தகத் திருவிழாவிற்கு தேதிகளை அறிவித்தது; The Big Bad Wolf

உலகளவில் மிகப் பெரிய ஓர் மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக கருதப்படும்  The Big Bad Wolf  வருகின்ற நவம்பர் 29 முதல் டிசம்பர் 09 வரை, துபாய் Studio City-யில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை தினமும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

துபாயில் தனது ஆறாவது சீசனை துவங்கும் The Big Bad Wolf, 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று உலகளவில் 15 நாடுகளில் உள்ள 37 முக்கிய நகரங்களில் இந்நிகழ்வை நடத்திவருகிறது. இவற்றுள் பிலிப்பைன்ஸ், கம்போடியா, ஹாங்காங், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, தென் கொரியா, தாய்லாந்து, தைவான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அடங்கும்.

இந்த புத்தக திருவிழாவில் நன்கு விற்பனையாகும் புத்தகங்கள், சுயசரிதைகள், கிராஃபிக் நாவல்கள், சமையல் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், கிளாசிக்ஸ், சுய உதவி, அறிவியல் புனைவு கதைகள், கலை, கைவினைப் பொருட்கள் தொடர்பான புத்தகங்கள், வரலாறு, வணிக புத்தகங்கள், அரபு மொழிப் புத்தகங்கள்  மற்றும் பலவையுடன் சுமார் இரண்டு மில்லியன் புத்தகங்கள் விற்பனைக்கு தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து The Big Bad Wolf நிறுவனர் ஆண்ட்ரூ யாப் கூறுகையில்,  நாங்கள் உலகளவில் வாசிப்பை ஊக்கப்படுத்தும் ஓர் இயக்கமாக இருந்துகொண்டு, அனைவருக்கும் புத்தக வாசிப்பின் மகத்துவத்தை விதைத்து, ஒரு புத்தகத்தால் உலகையே மாற்ற முடியும் என்பதை கற்றுத்தர முயலுகிறோம் என்றார்.

இந்த நிகழ்வு துபாய் கலாச்சாரம் மற்றும் கலை அதிகார சபையின்  (துபாய் கலாச்சாரம்) ஆதரவிலும்,  மன்னரின் மகள் மாண்புமிகு  ஷேக்கா லதீபா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.