நகரின் முக்கிய சந்திப்பான துபாய் வர்த்தக மைய சந்திப்பு துபாயின் முக்கிய சாலைகளான ஷேக் சயீத் சாலை, 2 டிசம்பர் சாலை, ஷேக் கலீஃபா பின் சயத் சாலை, ஷேக் ரஷீத் சாலை, ஜபீல் பேலஸ் சாலை ஆகிய ஐந்து சாலைகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாகும். இது பல குடியிருப்பு, வணிக மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளை இணைக்கிறது.
இந்த புதிய திட்டம் மூலம் துபாயின் முக்கிய நிகழ்வுகள், திட்டங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதில் இணைக்க முடியும்.
என்ன மாற்றங்கள், எவ்வளவு நிதி?
துபாய் மன்னர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் துணை பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இருவரின் ஆணைக்கிணங்க, இதற்காக AED 696 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளனர். இந்த சந்திப்பிற்கு குறுக்கே ஐந்து புதிய மேம்பாலங்கள், 5000 மீட்டர்களுக்கு நிறுவப்படுகிறது.
ஐந்து புதிய இணைப்பு மேம்பாலங்கள்:
* ஷேக் சயீத் சாலை மற்றும் ஷேக் கலீஃபா பின் சயத் சாலைக்கு குறுக்கே இருவழிப்பாதைகளுடன் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் மணிக்கு 3,000 வாகனங்களை வரை இயக்கலாம்.
* 2 டிசம்பர் சாலை மற்றும் ஷேக் ரஷீத் சாலையை இணைக்கும் வகையில் இருவழிப்பாதை கொண்ட இரு மேம்பாலங்கள் நிறுவப்படுகிறது. இதில் மணிக்கு 6,000 வாகனங்கள் வரை இயக்க முடியம்.
* அல் மஜிலிஸ் சாலை மற்றும் 2 டிசம்பர் சாலையை இணைக்கும் இரண்டு புதிய மேம்பாலங்கள் இருவழிபாதையுடன் நிறுவப்படுகிறது. இதில் மணிக்கு 6,000 வாகனங்கள் வரை இயக்க முடியம்.

இந்த திட்டத்தின் பயன்கள் என்ன?
* இந்த திட்டம் முடிந்த பின் தற்போதுள்ளதை விட போக்குவரத்து இருமடங்கு மேம்பாடு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சந்திப்பை கடக்கும் போது நேரம் 12 நிமிடங்களில் இருந்து 90 நொடிகள் வரை குறைகிறது.
* ஷேக் சயீத் சாலையில் இருந்து ஷேக் கலீஃபா பின் சயத் சாலைக்கு பயண நேரம் 6 நிமிடங்களில் இருந்து 1 நிமிடமாக குறைகிறது.
* இதன் மூலம் 500,000-க்கும் மேற்ப்பட்ட குடிமக்கள் மட்டும் குடியிருப்பாளர்கள் பயன்பெறுவர்.
* துபாயின் முக்கியமான வணிக, சுற்றுலா மையங்களை இணைக்கும் வண்ணம் அமையவுள்ளது.
இந்த திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் துவங்கப்படும் எனவும் டிசம்பர் 2026 நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள இணைப்புகள் அப்படியே இருந்து கூடுதல் வாகன போக்குவரத்துக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிகப்படுள்ளது.
