🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

200 டெலிவரி ஊழியர்களை விருது வழங்கி கௌரவித்த துபாய் அரசு

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) 3வது ஆண்டாக சிறப்பாக பணியாற்றிய டெலிவரி ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

டெலிவரி ஊழியர்களுக்கு விருது:

துபாயில் டெலிவரி ஊழியர்களின் தேவை அதிகரித்து வருவதால் வெளிநாட்டினர் பலர் இங்கு டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். டெலிவரி ஊழியர்களுக்கு பல சாலை விதிகள் உள்ள நிலையில் அதை முறையாக பின்பற்றி சிறப்பாக பணியாற்றிய 200 டெலிவரி ஊழியர்களுக்கு துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) விருதுகளை வழங்கியுள்ளது. 

டெலிவரி ஊழியர்களுக்கு அங்கீகாரம்

டெலிவரி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் Delivery Sector Excellence Award என்ற விருதை வழங்கி வருகிறது. 3வது ஆண்டாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய 200 டெலிவரி ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதுக்காக போக்குவரத்து விதிமீறல் மற்றும் வாடிக்கையாளர்கள் புகாரின்றி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது, பிராந்தியத்தில் டெலிவரி ஊழியர்களை அங்கீகரிக்கும் முதல் விருதாகும். கௌரவிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களில் தங்கப் பிரிவில் 50 பேரும், வெள்ளிப் பிரிவில் 60 பேரும், வெண்கலப் பிரிவில் 90 பேரும் அடங்குவர். 

இதில் சிறந்த டெலிவரி ஊழியர் மட்டுமின்றி சிறந்த டெலிவரி நிறுவனம், சிறந்த பார்ட்னர், சிறந்த டெலிவரி நிறுவனம் (via Smart Platforms and Apps) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. 

TAGGED: