துபாய் தேராவில் கங்குவா படக்குழுவுடன் கொண்டாடிய ரசிகர்கள்!

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிறுத்தை சிவா இயக்கி சூர்யா, திஷா பட்டாணி, பாபி தியோல் போன்ற பல்வேறு திரைப் பிரபலங்கள் நடித்த கங்குவா திரைப்படம், வருகின்ற நவம்பர் 14 திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு படக்குழு சார்பில் பல்வேறு புரமோஷன் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக நவம்பர் 10 மாலை 06 மணிக்கு துபாயில் உள்ள  VOX திரையரங்கில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா, நடிகர் பாபி தியோல் மற்றும்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரை கொண்டு PHARS FILM, STUDIO GREEN, VOX மற்றும் BARAAK ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அரங்கேறிய நிகழ்வுகள்:

நவம்பர் 10, மாலை 06 மணிக்கு துபாய் தேராவில் துவங்கிய இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோல் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நடன நிகழ்வு, நடிகர்களின் உரையாடல் போன்றவை அரங்கேறின.

நடனக்குழு கங்குவா திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர், பின் நடிகர் சூர்யா, பாபி தியோல் முன் ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் பொங்கியது போன்ற நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றது. மேலும் இங்கு கங்குவா திரைப்படத்தின் டீசர்,டிரைலர், படத்தின் பாடல்கள் போன்றவையும் ரசிகர்களுக்கு திரையிடப்பட்டன.