53-வது தேசிய தினத்தில் அமீரகம் முழுக்க திட்டமிடப்பட்டுள்ள கொண்டாட்டங்கள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 02 ஆம் நாள் அமீரக தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது, இந்த நாள் 1971 இல் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் தலைமையில் ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்த ஒரு தேசமாக இணைந்த வரலாற்று தருணத்தை நினைவுகூருகிறது. தற்போது 53-வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக வார இறுதி நான்கு நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பல்வேறு அமீரகங்களில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய தின கொண்டாட்டங்கள் என்ன என்பது குறித்து முழுமையாக காண்போம்.

துபாய் மால்கள்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை கொண்டாட துபாய் மால்கள் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன, இதன் மூலம் தேசிய தின கொண்டாட்ட காலத்தில், 60% முதல் 90% வரை தள்ளுபடி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மால்களில் பல கலாச்சார நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனுபவங்களை அனுபவிக்க Mall of the Emirates, City Centre Mirdif, The Outlet Village, மற்றும் City Walk 2 போன்ற பிரபலானமான மால்களில் பெற முடியும்.

புர்ஜ் கலிபா & துபாய் பவுண்டேஷன்:

தேசிய தினத்திற்கு துபாய் பவுண்டேஷன் வாட்டர் ஷோ மற்றும் புர்ஜ் கலிபா வண்ண விளக்குகளால் ஜொலிப்பு போன்ற நிகழ்வுகள் அன்று மாலை 6:00, 7:00, 8:00 ஆகிய நேரங்களில் நடைபெறவுள்ளது.

வாணவேடிக்கைகள்:

தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களான La Mer, சயீத் பாரம்பரிய விழா (Zayed Heritage Festival), துபாய் பெஸ்டிவல் சிட்டி மால், அல் சீஃப், அபுதாபி கார்னிச், JBR கடற்கரை, ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் இரவு 8:00 முதல் 10:00 மணி வரை வாணவேடிக்கையுடன் சேர்த்து பல நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.

பாம் ஜுமைரா தீவில் கொண்டாட்டங்கள்:

தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக துபாய் Palm Jumeirah தீவில் இரவு 08:00 மணியில் இருந்து நேரடி இசை, ருசியான உணவுகள் மற்றும் கண்கவர் வாணவேடிக்கை காட்சிகளுடன் கொண்டாடலாம். இந்த இசை நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர்களின் பாரம்பரிய இசையும், குறைந்த விலைக்கு நினைவுச் சின்னங்களும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஏர் ஷோ: அல் புர்சான்:

அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா பகுதிகளில், Al Fursan விமானப் படை சார்பாக ஏர் ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய தினத்தில் வானில் வண்ண ஜாலம் காண்பிக்க விமானப்படை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.

பிற நிகழ்வுகள்:

இவைத்தவிர துபாய் குளோபல் வில்லேஜ், புர்ஜ் பார்க், யாஸ் மரினா சர்க்யூட், துபாய் கார்டன் சென்டர் ஆகிய பகுதிகளில் வண்ண விளக்குகள், அறுசுவை உணவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளன.