தென்பட்டது முஹர்ரம் பிறை; பகல் பொழுதிலேயே புகைப்படம் எடுத்த அபுதாபி வானியல் மையம்!

அபுதாபியில் உள்ள வானியல் ஆய்வு மையம், முஹர்ரம் மாதத்தின் பிறையை பகல் பொழுதிலேயே புகைப்படம் எடுத்துள்ளது.  

 பொதுவாக இளம் பிறை நிலவானது மிகவும் மங்கலாகவும், பகல் வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரியாதவாறும் இருக்கும். ஆனால், சர்வதேச வானியல் மையம் (International Astronomical Center), அபுதாபியில் உள்ள அல் கத்ம் வானியல் ஆய்வு மையத்தின் (Al Khatm Astronomical Observatory) உதவியுடன் ஜூன் 15 அன்று அமீரக நேரப்படி காலை 11:00 மணியளவில் இந்த புகைப்படம் எடுத்துள்ளது.

புகைப்படம் எடுக்கும் போது நிலவின் நிலை:

 இந்த புகைப்படம் எடுக்கப்படும் போது நிலவு தோன்றி வெறும் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தது. அப்போது நிலவு சூரியனிலிருந்து வெறும் 5.4 டிகிரி கோணத்தில் தள்ளி அமைந்திருந்தது.

இந்த இளம் பிறையை,  பகல் வெளிச்சத்திற்கு இடையே துல்லியமாகப் படம் பிடித்ததுள்ளது. 

முஹர்ரம் (Muharram):

இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் (Hijri Calendar) முதல் மாதமாகும்.

இந்த பிறையின் வருகை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் புதிய ஹிஜ்ரி ஆண்டின் (1448 AH) தொடக்கத்தைக் குறிக்கிறது.

இஸ்லாத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று என்பதால், இந்த பிறை கவனிப்பு மிகுந்த மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

TAGGED: