அபுதாபி பஸ் பாஸ்: AED 35-க்கு அன்லிமிடட் பயணத்தை பெறுவது எப்படி?

அபுதாபி நகரில் பொதுப் போக்குவரத்து பயன்படுத்த விரும்புவோருக்கு, அவர்களுக்கு ஏற்ற வகையில், பல பாஸ்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அபுதாபிக்கு தற்காலிகமாக பஸ்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அபுதாபி மொபிலிட்டியில் (AD Mobility) இருந்து ஏழு நாள் அல்லது 30 நாள் பொது போக்குவரத்து பாஸைப் பெற்றுக்கொள்ளலாம். இது மிகவும் செலவு குறைவான வழியாகும்.

இந்த வாராந்திர அல்லது மாதாந்திர பாஸ்கள், பயணிகளுக்கு அபுதாபி நகரம், அல் ஐன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள பஸ் சேவைகளுக்கு வரம்பற்ற அணுகலை வழங்குகின்றன. இருப்பினும், இந்த பாஸை நகரங்களுக்கு இடையே பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்களின் விலை:

ஏழு நாட்களுக்கான பாஸ் AED 35-க்கும், 30 நாட்களுக்கான பாஸ் AED 95-க்கும் விநியோக்கப்படுகிறது.

பாஸ் பெறுவது எப்படி?

  • பஸ் பாஸைப் பெற Hafilat Card இருக்க வேண்டும். 
  • அது தனிப்பட்ட விவரங்கள் குறிப்பிடப்படாத  Anonymous Hafilat Card-ஆ அல்லது விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட Personalised Hafilat Card-ஆ என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

Anonymous Hafilat Card:

இதை பெற எந்த நிபந்தைகளும் இல்லை. இருப்பினும், இது எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்படாவிட்டால், Hafilat  கார்டு காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதன் பணம்  திருப்பி பெற முடியாது. இந்த கார்டின் விலை AED 10. இது 16 ஆண்டுகள் செல்லுபடியாகும். 

Personalised Hafilat Card:

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  மாணவர்களுக்காக இந்த கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பஸ் பாஸ்களை எங்கு வாங்கலாம்? 

  • விற்பனை மற்றும் ரீசார்ஜ் இயந்திரங்கள் (TVM) – இயந்திர இடங்களை http://darbi.itc.gov.ae என்ற வலைதளத்தில் கண்டறியலாம்.
  • பேருந்து  நிலையங்கள் மற்றும் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி அலுவலகங்கள்
  • பேருந்து  நிலையங்கள் மற்றும் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி அலுவலகங்கள்  
  • அபுதாபி கூட்டுறவு சங்கம் (SPAR)  
  • அல் ஐன் கூட்டுறவு சங்கம் 
  • அபுதாபி, அல் ஐன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள அனைத்து லூலூ ஹைப்பர்மார்க்கெட் மற்றும் லூலூ எக்ஸ்சேஞ்ச் கிளைகள்
  • hafilat.darb.ae என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விகிதங்கள்:

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு  மாதாந்திர பாஸ் AED 80 என்ற  மானிய விலையில் கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பேருந்து  நிலையங்கள் அல்லது விமான நிலையத்தில் உள்ள அருகிலுள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி அலுவலகத்தில் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்க வேண்டும்.  

TAGGED: