அபுதாபியில் மூடுபனி; அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கை!

அபுதாபி மற்றும்  ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று காலை கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  

இதனால் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகள் மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் மாறும் வேக வரம்புகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

மூடுபனியைத் தவிர, பொதுவாக நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மணிக்கு 10-20 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும். சில சமயங்களில் இது மணிக்கு 30 கி.மீ வரை அதிகரிக்கலாம். இதனால் தூசி மற்றும் மணல் பறக்க வாய்ப்பு உள்ளது. இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.

அதிகபட்ச வெப்பநிலை 43° செல்சியஸ் முதல் 48°செல்சியஸ் வரை இருக்கும். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 36° செல்சியஸ் முதல் 45° செல்சியஸ் வரையும், மலைப்பகுதிகளில் 30° செல்சியஸ் முதல் 36° செல்சியஸ் வரையும் இருக்கும்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதன்படி உட்புறப் பகுதிகளில் 70 முதல் 90 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும். மலைப்பகுதிகளில் 55 முதல் 70 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடல் அலைகள் மிதமானதாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், லேசான மழை மற்றும் தூசுடன் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: