அபுதாபி அல் தஃப்ரா பகுதியில் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டுதலின் படி, அபுதாபி சர்வதேச படகுக் கண்காட்சி தனது ஆறாவது ஆண்டை நவம்பர் 21 முதல் 24 வரை ADNEC மையம், அபுதாபி மெரினா அரங்கில் நடைபெறவுள்ளது.
ADNEC குழுமத்தின் நிகழ்வுகள் பிரிவு கேப்பிட்டல் ஈவெண்ட்ஸ் (Capital Events) அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், இந்த படகுக் கண்காட்சி நான்கு நாட்களுக்கு குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் அரங்கேறவுள்ளது. இந்நிகழ்வு கடலின் வாழ்வியல் மற்றும் கலாசாரத்தின் புதிய புதுமைகளைக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் நேரம்:
கடல் நீரில் நடைபெறும் முன்னணி நிகழ்வாக திகழும் இந்த கண்காட்சி திட்டமிடப்பட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படவுள்ளது. இது கடல் வாழ்க்கைமுறைகளிலும், நீர் சார்ந்த விளையாட்டுகளிலும் (water sports) சமீபத்திய புதுமைகளை வெளிப்படுத்தும் பலவகையான சாதனங்கள் இங்கு வரிசைகட்டவுள்ளது.
டிக்கெட் கட்டணம்:
நிகழ்விற்கான நுழைவுச்சீட்டை பொறுத்த வரையில் பிரான்ஸ், சில்வர், கோல்ட், பிளாட்டினம், குரூப் ஆப் 6 என ஐந்து பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் – AED 60சில்வர் – AED 100
கோல்ட் – AED 280
பிளாட்டினம் – AED 480
குரூப் ஆப் 6 – AED 280
ஒவ்வொரு ஆண்டும் புதிய மேம்பாடுகள்:
இந்த படகுக் கண்காட்சிக்கு மக்கள் வரவேற்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதிய மேம்பாடுகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வரவிருக்கும் நிகழ்வு முன்பு இருந்ததைவிட மிகச் சிறப்பாக இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
மரைன் ஸ்போர்ட்ஸ்:
கடல் விளையாட்டு, கடல் வாழ்க்கை முறை, கடல் சார்ந்த வளர்ச்சி போன்றவற்றில் புதுமைகள் மற்றும் புதுமையான திறமைகளை ஊக்குவிக்க, அபுதாபியின் முயற்சியை காட்டுகிறது. அதனோடு சேர்ந்து கடல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முயற்சியையும் இந்த நிகழ்வு வலுப்படுத்துகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு:
இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வு இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 34,000 மேற்பட்ட பார்வையாளர்களையும், கடல் சார்ந்த ஆர்வலர்கள், நீர் விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பல்வேறு குடும்பங்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக 80-க்கும் மேற்பட்ட புதிய கப்பல் நிறுத்துமிடங்களும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
படகுகள் அணிவகுப்பு:
இந்த கண்காட்சியில் ஆடம்பர படகுகள், பயணிகளுக்கான படகுகள் மற்றும் வீடு போன்ற படகுகள் வரிசையாக காட்சிப் படுத்தப்படவுள்ளது. மேலும், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட பலவையும் இந்த கண்காட்சியில் இடம் பெரும். இவ்வாண்டு பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு அளவுகளிலும் படகுகள் அணிவகுக்கவுள்ளன.
