தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரதர் திரைப்பட நட்சத்திர சந்திப்பு விழா கடந்த அக்டோபர் 26 (சனிக்கிழமை) இரவு ஏழு மணியளவில் துபாய் அல் குவாசிஸ்-ல் உள்ள லூலூ ஹைப்பர்மார்க்கெட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதர் படத்தின் சார்பாக நடிகர் ஜெயம் ரவி, நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர் M. ராஜேஷ் மற்றும் பூமிகா சாவ்லா, VTV கணேஷ் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதனை 974 Events, Lulu Hypermarket, Home Screen Entertainment, Golden Cinema, Ayngaran International மற்றும் Global Media Hub ஆகியோர் இணைந்து நடத்தினர்.
மிகவும் கலகலப்பாகவும், கொண்டாட்டமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைகளின் நடன நிகழ்வு, வந்திருந்த ரசிகர்களுடன் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் நிகழ்த்திய மகிழ்வான உரையாடல் போன்றவை இடம் பெற்றிருந்தன.
