புர்ஜ் கலீஃபாவில் 8 நாள் புத்தாண்டு கொண்டாட்டம்; அனுமதி இலவசம்

புத்தாண்டை முன்னிட்டு புர்ஜ் கலீஃபாவில் வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட துபாய் நகரமே தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஒரு நாள், இரண்டு நாள் கொண்டாட்டம் இல்லாமல் மொத்தமாக 8 நாள் புத்தாண்டு கொண்டாட்டம் புர்ஜ் கலீஃபாவில் நடைபெறுகிறது. 

8 நாள் புத்தாண்டு கொண்டாட்டம்

புர்ஜ் கலீஃபாவில் முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது 8 நாள் புத்தாண்டு கொண்டாட்டமாக நடைபெறும் என்று புர்ஜ் கலீஃபாவிவை நிர்வகித்து வரும் எமார் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கும் புத்தாண்டு கொண்டாட்டம் ஜனவரி 7ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாணவேடிக்கை நிகழ்ச்சி – டவுன்டவுன் 

புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சியை காண டவுன்டவுன் பகுதியில் பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வாணவேடிக்கையை பார்வையிட டவுன்டவுன் பகுதி பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். 

புத்தாண்டு கொண்டாட்டம் – புர்ஜ் பார்க்

புர்ஜ் கலீஃபாவை ஒட்டியுள்ள புர்ஜ் பார்க் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. எமார் நிறுவனம் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்கவர் நடனம் மற்றும் மனதை மயக்கும் இசை நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். 

டிக்கெட் கட்டண விவரம்

  • பெரியவர்களுக்கு: AED 997.5 
  • 5–12 வயது குழந்தைகளுக்கு: AED 577.5
  • 5 வயதுக்குட்பட்டோர்: அனுமதி இலவசம் (முன்பதிவு செய்யப்பட்ட அணுகல் பேட்ஜ் கட்டாயம்)

எமார் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் https://mydubainewyear.emaar.com/en/burj-park/ புர்ஜ் பார்க் பகுதியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.