The Walt Disney Company மற்றும் அபுதாபி அடிப்படையிலான அனுபவ மேம்பாட்டு நிறுவனம் Miral, யாஸ் தீவில் புதிய டிஸ்னி தீம் பார்க் மற்றும் ரிசார்ட் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இது டிஸ்னியின் உலகளாவிய ஏழாவது தீம் பார்க் ஆகும். மத்திய கிழக்கில் நிறுவப்படும் முதல் டிஸ்னி பூங்காவாகும். தற்போது உலகம் முழுவதும் 6 டிஸ்னி தீம் பார்க் செயல்பட்டு வருகிறது.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் அவர்கள், யாஸ் தீவில் அமையவுள்ள டிஸ்னி தீம் பார்க் ரிசார்ட் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் அமைந்துள்ள டிஸ்னியின் 6 ரிசார்ட்டுகள் பின்வருமாறு:
அனஹைம், கலிஃபோர்னியா, அமெரிக்கா:
- Disneyland Resort
- இது 1955 இல் திறக்கப்பட்டது – முதல் டிஸ்னி பூங்கா.
ஆர்லாண்டோ, புளோரிடா, அமெரிக்கா:
- வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்
- உலகின் மிகப்பெரிய டிஸ்னி பூங்கா
டோக்கியோ, ஜப்பான் (Tokyo, Japan)
- Tokyo Disneyland மற்றும் Tokyo DisneySea
- ஜப்பானில் உள்ள தனியார் டிஸ்னி இணைபபக்திகள் இயக்கும் பூங்கா.
பாரிஸ், பிரான்ஸ் (Paris, France)
- டிஸ்னிலேண்ட் பாரிஸ்
- ஐரோப்பாவில் உள்ள ஒரே டிஸ்னி பூங்கா.
ஷாங்காய், சீனா (Shanghai, China)
- Shanghai Disney Resort
- இந்த பூங்கா டிஸ்னி பூங்கா 2016 இல் திறக்கப்பட்டது.
ஹாங்காங் (Hong Kong)
- Hong Kong Disneyland
- 2005 இல் தொடங்கப்பட்டது.
இவற்றுடன் தற்போது அபுதாபி, யாஸ் தீவில் புதிய பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. “வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் 102 ஆண்டு கால வரலாற்றில், பல முக்கியமான தருணங்களில் எண்ணற்ற சாதனைகளும் படைத்துள்ளன, என்று டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஐகர், குறிப்பிட்டார்.
இந்த டிஸ்னிலேண்ட் அறிவிப்பு, யாஸ் தீவு தனது 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அதே நேரத்தில் வெளியானது. இது புதுமை, படைப்பாற்றல் மற்றும் வெற்றியின் 15 ஆண்டுகளைக் கொண்டாடும் ஒரு முக்கியமான தருணம் என்று மிரால் நிறுவனத்தின் தலைவருமான முகமது அல் முபாரக் கூறியுள்ளார்.
இந்த பூங்கா யாஸ் தீவின் நீர்ப்பகுதியில் (Yas Island Waterfront) அமைக்கப்படும். இது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களின் முக்கிய சுற்றுலா சந்தைகளை இணைக்கும் ஒரு நுழைவு வாயிலாக செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஃபெராரி வேர்ல்ட் (Ferrari World), வார்னர் Bros. வேர்ல்ட் (Warner Bros. World) மற்றும் சீவேர்ல்ட் அபுதாபி (SeaWorld Abu Dhabi) ஆகியவற்றுடன் இணையவுள்ளதால் யாஸ் தீவு உலக அளவில் ஒரு முக்கிய பொழுதுபோக்குத் தலமாக இருக்கும் .
மேலும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள ஆறு டிஸ்னி தீம் பூங்காக்கள் 4 பில்லியன் மக்களை மகிழ்வித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பூங்காவின் திறப்பு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
