பிரமிப்பூட்டும் துபாய் ட்ரோன் ஷோ மீண்டும் துவங்குகிறது:

டிசம்பர் 6, 2024 முதல் ஜனவரி 12, 2025 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் வரிசைக்கட்டும் 30-வது துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் நிகழ்வில் பிரமிப்பூட்டும் கண்கவர் ட்ரோன் ஷோ அரங்கேறவுள்ளது.

எப்போது?

துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் (DSF) ஒருங்கிணைக்கும் ட்ரோன் ஷோ, ப்ளூவாட்டர்ஸ் மற்றும் ஜுமேரா கடற்கரை குடியிருப்பு எதிரே உள்ள கடற்கரையில், டிசம்பர் 06 துவங்கி ஷாப்பிங் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை, தினமும் இரவு 08 மணிக்கு துவங்கி 10 மணி வரை ட்ரோன்கள் வானை அலங்கரிக்கவுள்ளது.

கருப்பொருள் மற்றும் அட்டவணை

இந்த ஆண்டு,  டிசம்பர் 06 முதல் 26 வரை முப்பது ஆண்டுகளை தொட்ட துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் என்ற தலைப்பின் கீழ் 1000  ட்ரோன்களை கொண்டு வானில் வண்ண ஜாலம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இரண்டாவதாக, டிசம்பர் 27 முதல் ஜனவரி 12, 2025 வரை பாரம்பரியம் மற்றும் நவீனம் தொடர்பான கதைகளை வானில் ட்ரோன்கள் ஓசையுடன் காட்சிப்படுத்தவுள்ளது.

சிறப்பு ஷோ’க்கள்

அற்புதமான திரையரங்குகளின் ரசிகர்களுக்காக, ஒரு புதிய பைரோ-ட்ரோன் நிகழ்ச்சி டிசம்பர் 13 அன்று, ஜுமேரா கடற்கரை குடியிருப்பு பகுதியில் நடைபெறும். ஸ்கைடைவ் ஸ்டண்ட்களுடன் திகைப்பூட்டும் பைரோடெக்னிக் இணைத்து, ஐன் துபாயின் பின்னணியில், இரவு 8 மணிக்கு கண்டுகளிக்க முடியும்.

இரண்டாவது, பைரோ ட்ரோன் காட்சி அதே மாலை 10 மணிக்கு நடைபெறும். டிசம்பர் 13 பைரோ ட்ரோன் காட்சியை நீங்கள் தவறவிட்டால், DSF இன் இறுதி வாரமான ஜனவரி 11 அன்று மீண்டும் காட்சிப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.