துபாய் சர்வதேச நிதி மையம் (DIFC) தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பொருளாதார நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளன.
DIFC நிவாரணத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
தற்போதைய இக்கட்டான சூழலில் வணிகங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், துபாயின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில்லறை வர்த்தகம் மற்றும் வணிகம் செய்யும் வாடகைதாரர்களுக்கு நெகிழ்வான கட்டண முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வணிக உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நிறுவனப் பதிவாளர் சேவைகள், தரவு பாதுகாப்புத் துறை மற்றும் ஊழியர் பதிவு போன்ற நிர்வாகச் செயல்பாடுகளுக்கான கட்டணங்களைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
துபாய் நிதிச் சேவைகள் ஆணையம் (DFSA), புதிய நிறுவனங்கள் அனுமதி பெறுவதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தடையின்றி இயங்குவதற்கும் தற்காலிக ஒழுங்குமுறை தளர்வுகளை அறிவித்துள்ளது.
நிர்வாகத்தின் கருத்து
இது குறித்து துபாய் சர்வதேச நிதி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆரிப் அமிரி கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த நடவடிக்கைகள் உடனடி நிதி அழுத்தத்தைக் குறைப்பதோடு, துபாய் சர்வதேச நிதி மையத்தின் நீண்டகால வலிமையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஒரு சிறந்த உலகளாவிய நிதி மையமாக துபாய் தொடர்ந்து நீடிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
