18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இனி தொழில் தொடங்கலாம்; அமீரகத்தில் புதிய சட்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய சட்டப்படி, 18 வயது பூர்த்தியானவர்கள் இப்போது சட்டப்பூர்வமாகப் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் மூலம் 18 வயது நிறைந்தவர்கள் இனி பெற்றோர் அனுமதியில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல செயல்முறைகளில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய சட்டப்படி, 18 வயது பூர்த்தியானவர்கள் இப்போது சட்டப்பூர்வமாகப் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதற்கு முன்பு இந்த வயது வரம்பு 21 ஆக இருந்தது.

இந்த மாற்றத்தால் 18 வயது நிறைந்த இளைஞர்களுக்குக் கிடைக்கும் புதிய உரிமைகள் மற்றும் பொறுப்புகள்:

சட்டப்பூர்வ வயது: 

இனி 18 வயது முடிந்தாலே ஒரு முழுமையான “சட்டப்பூர்வ குடிமகன்”. இதற்கு முன் இருந்த 21 வயது முறை மாற்றப்பட்டு, இப்போது 18 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அனுமதி தேவையில்லை:

வங்கி கணக்கு தொடங்குவது, வீடு வாடகைக்கு எடுப்பது அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற காரியங்களுக்கு இனி பெற்றோரின் கையெழுத்தோ, அனுமதியோ கட்டாயமில்லை.

18 வயது இளைஞர்கள் இப்போது என்ன செய்யலாம்?

நிதி மற்றும் வங்கி: சொந்தமாக வங்கி கணக்கு தொடங்கலாம், கடன் (Loans) வாங்கலாம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை சுயமாக மேற்கொள்ளலாம்.

ஒப்பந்தங்கள்: வேலை ஒப்பந்தங்கள், வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது போன்ற சட்ட ரீதியான ஆவணங்களில் தாங்களாகவே கையெழுத்திடலாம்.

தொழில் தொடங்குதல்: ஒரு நிறுவனத்தின் பங்குதாரராகவோ அல்லது சொந்தமாக தொழில் தொடங்குபவராகவோ (Founder) மாற முடியும்.

கல்வி: உயர்கல்வி தொடர்பான முடிவுகளை தாங்களே எடுக்கலாம்.

கவனிக்க வேண்டியவை: சட்டம் உரிமைகளை வழங்குவதோடு சில பொறுப்புகளையும் வழங்குகிறது.

இந்த மாற்றம் இளைஞர்களுக்கு சுதந்திரத்தையும் அதே சமயம் பொறுப்பையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. 18 வயதிலேயே வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்ப்ளூயன்சர்கள், கண்டெண்ட் கிரியேட்டர்கள் சமூக ஊடகங்களில் பணம் பெறும் விளம்பரங்கள், தயாரிப்பு ப்ரமோஷன்களில் ஈடுபட்டால் கட்டாயமாக அதற்கான வணிக உரிமம் பெற வேண்டுமென்று புதிய அமீரக ஊடக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: