ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் நோல் கார்ட்டை பெறுவது எப்படி?

துபாயில் வசிக்கும் மக்கள் இனி தங்களது பிளாஸ்டிக் ‘நோல்’ (nol) கார்டை கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஸ்மார்ட்போனிலேயே டிஜிட்டல் கார்டாக மாற்றிக்கொள்ளலாம். 

துபாயில் வசிக்கும் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு ‘நோல்’ (nol) கார்டு மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது.  பெரும்பாலும் பிளாஸ்டிக் கார்டாக பயன்படுத்தப்படும் இந்த நோல் கார்டை ஸ்மார்ட்போனிலேயே டிஜிட்டல் முறையில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வரும் கவலையின்றி, மொபைல் போனை வைத்தே பயணக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்போது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்குகிறது.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

தற்போது Samsung மற்றும் Huawei மொபைல் பயன்படுத்துபவர்கள் மட்டுமே டிஜிட்டல் நோல் கார்டைப் பெற முடியும். iPhone பயனர்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை.

டிஜிட்டல் கார்டாக மாற்றுவது எப்படி?

டிஜிட்டல் கார்டை உருவாக்க, முதலில் மொபைலில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA)அதிகாரப்பூர்வ ‘nol Pay‘ ஆப் இருக்க வேண்டும். இது எமிரேட்ஸ் ஐடியுடன் (Emirates ID) இணைக்கப்பட்டு பாதுகாப்பாகச் செயல்படும்.

1. சாம்சங் (Samsung) பயனர்களுக்கு:

  • சாம்சங் மொபைலில் 2023 முதல் இந்த வசதி உள்ளது. 
  • உங்கள் மொபைலில் உள்ள Samsung Wallet ஆப்பைத் திறக்கவும்.
  • ‘Transport Card’ என்ற பகுதிக்குச் சென்று, ‘Add nol Card’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பிளாஸ்டிக் கார்டு தகவல்களை பதிவிடவும். இது தானாகவே உங்களை nol Pay ஆப்பிற்கு அழைத்துச் சென்று கார்டைச் செயல்படுத்தும்.

2. ஹூவாய் (Huawei) பயனர்களுக்கு:

  • ஹூவாய் மொபைல் அல்லது ஹூவாய் வாட்ச் 3 (Watch 3) ஆகியவற்றில் 2020 முதல் இந்த வசதி உள்ளது. 
  • Huawei Wallet ஆப்பைத் திறந்து, ‘+’ குறியீட்டை அழுத்தவும்.
  • அதில் ‘Transportation cards’ என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் நோல் கார்டு வகையைத் (Silver/Gold) தேர்வு செய்யவும்.
  • ‘Digitise an existing physical card’ என்பதைத் தேர்ந்தெடுத்து வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஒருமுறை உங்கள் பிளாஸ்டிக் கார்டை டிஜிட்டல் கார்டாக மாற்றிவிட்டால், உங்களிடம் இருக்கும் பழைய பிளாஸ்டிக் கார்டு நிரந்தரமாகச் செயலிழந்துவிடும். 

ஐபோன் (iPhone) பயனர்களுக்கு: 

தற்போதைய நிலையில், ஆப்பிள் வாலட் (Apple Wallet) நோல் கார்டுகளை ஆதரிப்பதில்லை. இருப்பினும், ஐபோன் பயனர்கள் துபாய் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு அட்டைகளை (Vehicle Registration) டிஜிட்டல் முறையில் சேமித்துக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் நோல் கார்டின் நன்மைகள்:

  • மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் டாக்ஸி கட்டணங்களை மொபைல் மூலம் செலுத்தலாம்.
  • பொது பார்க்கிங் மற்றும் சில அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பொருட்களை வாங்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
  • பிளாஸ்டிக் கார்டைத் தொலைக்கும் அபாயம் இல்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் பயணிகளின் வசதிக்காக இந்தச் சேவையை வழங்குகிறது. நீங்கள் சாம்சங் அல்லது ஹூவாய் பயனராக இருந்தால், இன்றே உங்கள் நோல் கார்டை டிஜிட்டல் மயமாக்கி கவலையற்ற பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

TAGGED: