இனி இரட்டிப்பு வேகம், துபாயில் புதிய 5G+ சேவை அறிமுகம்!

துபாயின் du நிறுவனம் 5G+ நெட்வொர்க் சேவையை தொடங்கியுள்ளது, இதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் இந்த சேவையை எவ்வாறு பெறுவது என்பதை விரிவாக காண்போம். 

du-வின் 5G+ நெட்வொர்க்

துபாயின் தொலைத்தொடர்பு நிறுவனமான du, 5G+ மொபைல் நெட்வொர்க் சேவையை தொடங்கியுள்ளது. இது தற்போதைய 5G நெட்வொர்க்குகளை விட இரண்டு மடங்கு வேகத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள மொபைல் இணைப்புகளில் நெட்வொர்க் வேகம், செயல்திறனில் முன்னேற்றம் ஏற்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய 5G+ நெட்வொர்க்  du-இன் மேம்படுத்தப்பட்ட 5G கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி AI மூலம் இயங்கும் அப்ளிகேஷன்களை ஆதரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

இதுகுறித்து du நிறுவனத்தை சேர்ந்த கரீம் பென்கிரேன் கூறுகையில், “தற்போது பொதுமக்களிடையே AI பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த 5G+ நெட்வொர்க், AI சார்ந்த அப்ளிகேஷன்களுக்கு சிறந்த செயல்திறன்களை வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, நாங்கள் வேகமான நெட்வொர்க்கை மட்டும் வழங்கவில்லை.

அதனுடன் சேர்த்து அல்ட்ரா ஹெச்டி ஸ்டீரிம்ங் (ultra-HD streaming), வேகமான கேமிங் வசதி (lag-free gaming), உண்மையான நேர மொழி பெயர்ப்பு (real-time translation),  ஆக்மென்டட் ரியாலிட்டி (augmented reality) போன்ற பல்வேறு அனுபவங்களை எங்களது வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

du-வின் 5G+ நெட்வொர்க் சேவை மொபைல் கேமிங் மற்றும் பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்கள் கூட்ட நெரிசலான இடங்களில் கூட வேகமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்தல், தடையற்ற ஸ்ட்ரீமிங் மற்றும் தெளிவான வீடியோ கால் போன்ற சேவைகளை பெறலாம்.

5G+ நெட்வொர்க்கை பெற என்ன செய்ய வேண்டும்?

du-வின் புதிய 5G+ சேவைகளை பெற  5G+ ஏற்ப ஸ்மார்ட்போன் மற்றும் du வழங்கும் SIM அல்லது eSIM வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் மற்றும் சிம் இரண்டும் 5G+ நெட்வொர்க் சேவைக்கு பொருந்துகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இது பற்றிய முழு விவரங்களை அறிய வாடிக்கையாளர்கள் du.ae/5G+ என்ற இணையதளத்தை அணுகவும். 

TAGGED: