30 நாட்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அனைவரையும் ஊக்குவிக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்-இன் 30×30 நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்:
துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் 2017-ல் தொடங்கப்பட்ட துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC – Dubai Fitness Challenge) வருடாந்திர நிகழ்வு, துபாயில் உள்ள அனைவரும் 30 நாட்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கிறது.
இந்த ஃபிட்னஸ் சேலஞ்சின் போது, நகரம் முழுவதும் இலவச உடற்பயிற்சி வகுப்புகள், ஓட்டப்பந்தயங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா மற்றும் பேடல் டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகள், மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும்.
யோகா, சைக்கிளிங், HIIT அல்லது ஷேக் சயீத் சாலையில் ஓடுவது என நீங்கள் விரும்பிய ஒரு செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகரலாம்.
இந்த நிகழ்வு எங்கே நடக்கும்?
துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் ஃபிட்னஸ் சேலஞ்ச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. முக்கியமாக, துபாய் ரன் (Dubai Run) மற்றும் துபாய் ரைடு (Dubai Ride) போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகள் ஷேக் சயீத் சாலையில் நடைபெறும்.
வயது வரம்பு
ஃபிட்னஸ் சேலஞ்ச்-இல் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. இதில் உள்ள செயல்பாடுகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு இருக்கும்.
இதில் இலவச வகுப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுடன் அனைத்து வயதினருக்காகவும் நடத்தப்படுகிறது. நவம்பர் 1 முதல் 30 வரை, 30 நாட்களுக்கு, தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அனைவரையும் ஊக்குவிப்பதே இதன் முக்கிய இலக்கு. இது ‘துபாய் 30×30’ என்று அழைக்கப்படுகிறது.
முன்பதிவு செய்ய: https://www.dubaifitnesschallenge.com/en/register/
