சமீபத்தில் வெளியான துபாய் வாக் திட்டத்தின் ஒரு அங்கமான Future Loop திட்டம், பாதசாரிகளுக்கு மிக ஏற்ற நகரமாக மாற்றவுள்ளது.
Future Loop என்றால் என்ன?
Museum of the Future, துபாய் உலக வர்த்தக மையம், எமிரேட் டவர்ஸ் மற்றும் துபாய் சர்வதேச நிதி மையம் (International Financial Centre) ஆகியவற்றை இணைக்கும் வண்ணம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்படவுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்ன?
குளிரூட்டப்பட்ட நடைபாதைகள்: அனைத்து காலத்திற்கும் ஏற்ப இந்த நடைபாதை முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்படுகிறது.
இயற்கை காட்சிகள்: இந்த திட்டத்தில் 30,000 சதுர மீட்டர் பசுமை திறந்தவெளிகள் அமைக்கப்படவுள்ளன.
வணிக நிலையங்கள்: நடைபாதையில் கடைகள் மற்றும் உணவகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சுற்றுப்புறப் பகுதி மேம்படுத்தப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுடன் மேம்படுத்தப்படுகிறது.
நன்மைகள் என்ன?
பாதசாரிகளுக்கு சிறந்த அனுபவம்: இந்த நடைபாதை பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் குறைப்பு: மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பங்கு: நடைபாதை உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடும் நகர அழகு: ஃபியூச்சர் லூப், நகரின் அழகிற்கு கூடுதல் அழகை சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், துபாய் பாதசாரிகள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்ற நகராகவும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைகிறது.
