துபாய் Gold Souk Extension-ல் 24K தங்க முலாம் பூசப்பட்ட சைபர் ட்ரக் வெல்லும் வாய்ப்பு!

உலகின் மிகப் பெரிய தங்கச் சந்தையான DUBAI GOLD SOUK EXTENSION 2024,  நவம்பர் 14 முதல் டிசம்பர் 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இங்கு விளம்பரத்திற்காக காட்சிப் படுத்த பட்டிருக்கும், பிராந்தியத்தின் முதல் 24 K முலாம் பூசப்பட்ட சைபர் ட்ரக்கை குலுக்கல் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

500 திர்ஹாமுக்கு மேல்…

இந்நிகழ்வில் 500 திர்ஹாம் அல்லது அதற்கு மேல் தங்க ஆபரணங்களை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் வாங்கும் ஒவ்வொரு 500 திர்ஹாமும் ஒரு குலுக்கல் முறையாக தேர்வு செய்யப்படும். இவ்வாறு நிகழ்வின் முடிவில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சைபர் ட்ரக் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் Gold Souk Extension

இந்த துபாய் தங்க பஜார் Deira Enrichment Project-ன் ஓர் அங்கமாகும், இது உலகளவில் பாரம்பரியம் மற்றும் நவீன சில்லறை அனுபவங்களின் தனித்துவமான கலவையை வழங்கும் தங்கம் மற்றும் தங்க ஆபரன வர்த்தகத்திற்கான முன்னணி இடமாகும்.

1 மில்லியன் சதுர அடிக்கு மேலான இடத்தில் அரங்கேறும் இந்நிகழ்வில், 295 விற்பனை அரங்குகள், 250 அலுவலகங்கள் மற்றும் 460 குடியிருப்புகள் கொண்டு வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. பலவிதமான சில்லறை கடைகள், பட்டறைகள் மற்றும் பொன் டீலர்கள் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளை விற்பனைக்கு காட்சிப் படுத்துவதன் மூலம் Souk நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.