நேரமும், பணமும் சேமிக்க துபாய் மால்களில் கொண்டுவரப்பட்ட பார்க்கிங் முறை!

துபாயின் மிகவும் பிரபலமான ஷாப்பிங் தலங்களில் ஒன்றான மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் சிட்டி சென்டர் டெய்ரா ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடையில்லா பார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தின.

பார்க்கிங் முறை எப்படி செயல்படுகிறது?

பொழுதுபோக்கிற்காக மால் செல்லும் மக்கள் மணி கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையில், மாலில் அதிக அளவில் பார்க்கிங் கட்டணம் செலுத்தக்கூடிய கட்டாயம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவ்வப்போது தேவையற்ற அபராதங்கள் செலுத்தவும் நேரிடுகிறது. 

 இந்த நிலையை தவிர்க்கவும், வர்த்தகத் தலங்களில் பயனாளர்கள் எளிதான வகையில் பார்க்கிங் முறையை அமல்படுத்தவும், தற்போது இந்த தடையில்லா பார்க்கிங் முறை (Barrierless Parkin system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள், பார்க்கிங் பற்றிய கவலை மறந்து பலரும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலுக்குள் நுழையும் வாகனங்களின் எண்கள் அங்கு பொருத்தப்பட்டு இருக்கும்  சென்சார் கேமராக்கள்(ANPR) மூலம் ஸ்கேன் செய்யப்படும். பின்னர் பார்க் செய்யப்பட்ட வாகனம் மாலுக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து வாகனம் வெளியேறும் நேரம் வரை கணக்கீடு செய்யப்படும். 

 இதற்கிடையில் குறிப்பிட்ட இலவச பார்க்கிங் வசதியை கடந்து, பார்க் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது வாகனங்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பார்க்கிங் மற்றும் கட்டண விவரங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

 பணம் செலுத்தும் முறை:

குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நபர்கள் பார்க்கிங் செயலி அல்லது இணையதளம்(Parkin. ae) மூலம் பணத்தை செலுத்தலாம். இதில் பணம் செலுத்துவதற்கு Apple Pay, Credit card, Debit card, Parking Wallet உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

 இது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்துவதை தவிர்க்க AutoPay option-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் வருகின்ற ஒவ்வொரு முறையும்  பார்க்கிங் wallet-ல் இருந்து கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேவையற்ற அபராதங்களை தவிர்க்க வழிவகுக்கிறது.

பார்க்கிங் கட்டண விவரம்:

Mall of the Emirates:

  • முதல் 4 மணி நேரம் இலவசம்
  • 4-5 மணி நேரம் – AED 20
  • 5-6 மணி நேரம் – AED 40
  • 6-7 மணி நேரம் – AED 80
  • 8 மணி நேரத்திற்கு மேல் – AED 100
  • இரவு முழுவதும் – AED 200

City Centre Deira:

  • முதல் 3 மணி நேரம் இலவசம்
  • 4-5 மணி நேரம் – AED 40
  • 5-6 மணி நேரம் – AED 60
  • 6-7 மணி நேரம் – AED 100
  • 7 மணி நேரத்திற்கு மேல் – AED 150
  • இரவு முழுவதும் – AED 350

சிறப்பு சலுகைகள்:

  • Mall of the Emirates: திங்கள்–வெள்ளி வரை 4 மணி நேரம் இலவசம்
  • City Centre Deira: திங்கள்–சனி வரை 3 மணி நேரம் இலவசம்
  • Vox Cinemas, Ski Dubai வாடிக்கையாளர்களுக்கு 2 மணி நேரம் கூடுதல் இலவசம்
  • AED 150-க்கு மேல் செலவழித்தால், முழு நாள் இலவச பார்க்கிங்

அபராத விபரம்:

முன்னதாக அபராதம் மற்றும் பார்க்கிங் கட்டணங்களில் செலுத்துவதற்கு ஐந்து நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு குறுஞ்செய்தியும், மூன்றாம் நாள் சம்பந்தப்பட்ட எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு எச்சரிக்கப்படுவர். மூன்று நாட்களுக்கு மேல் அபராதம் செலுத்தாத நபர்கள் மீது ஐக்கிய அரபு அமீரக பார்க்கிங் விதிமுறைகளின்படி AED 150 அபராதம் விதிக்கப்படும்.