துபாயின் முக்கிய இடங்களில் குறைந்தபட்ச மாதாந்திர பார்க்கிங் சந்தா அறிமுகம்.

துபாயின் 4 முக்கிய இடங்களான சிலிக்கான் ஒயாஸிஸ் – Zone (H), சிலிக்கான் ஒயாஸிஸ் – Limited Area, துபாய் ஹில்ஸ் மற்றும் WASL ரியல் எஸ்டேட் (கராமா, அல் குசைஸ் போன்ற பகுதிகள்) Zone W & WP ஆகிய பகுதிகளில் மாதாந்திர பார்க்கிங் சந்தா முறையை அறிமுகம் செய்தது Parkin நிறுவனம்.

துபாயின் பொது பார்க்கிங் ஆபரேட்டரான Parkin, நான்கு பகுதிகளிலும் மே 19 ஆம் தேதி முதல் மாதாந்திர பார்க்கிங் சந்தா கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் குறைந்த செலவில் பார்க்கிங் வசதியை எளிதாக அணுக முடியும் என்று Parkin கூறுகிறது. மேலும் இந்த மாதாந்திர பார்க்கிங் சந்தா நடைமுறை மூலம் பொதுமக்கள் காலவரையின்றியும், அபராதமின்றியும் தங்கள் வாகனங்களை பார்க் செய்ய முடியும். 

துபாயின் 4 இடங்களில், பகுதி வாரியாக மாதாந்திர பார்க்கிங் சந்தா விவரம்: 

சிலிக்கான் ஒயாஸிஸ் – Zone (H)

  • 3 மாதங்கள்: AED 1,400
  • 6 மாதங்கள்: AED 2,500
  • 12 மாதங்கள்: AED 4,500

சிலிக்கான் ஒயாஸிஸ் –  Limited Area

  • 3 மாதங்கள்: AED 1,000
  • 6 மாதங்கள்: AED 1,500
  • 12 மாதங்கள்: AED 2,500

துபாய் ஹில்ஸ்

  • 1 மாதம்: AED 500
  • 3 மாதங்கள்: AED 1,400
  • 6 மாதங்கள்: AED 2,500
  • 12 மாதங்கள்: AED 4,500

WASL ரியல் எஸ்டேட் – Zone W & WP
(கராமா, அல் குசைஸ் போன்ற பகுதிகள்)

  • 1 மாதம்: AED 300
  • 3 மாதங்கள்: AED 800
  • 6 மாதங்கள்: AED 1,600
  • 12 மாதங்கள்: AED 2,800

Roadside & Plots மற்றும் Parking Plots சந்தா விவரம்:

Roadside & Plots பார்க்கிங்

துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள Zone A, B, C & D பகுதிகளில் உள்ள Roadside & Plots பார்க்கிங்கில் 3 வாகனங்கள் வரை நிறுத்துவதற்கான மாதாந்திர சந்தா AED 500 முதல் ஆரம்பமாகிறது.

  • 1 மாதம்: AED 500
  • 3 மாதங்கள்: AED 1,400
  • 6 மாதங்கள்: AED 2,500
  • 12 மாதங்கள்: AED 4,500

Parking Plots

துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள Zone B & D பகுதிகளில் உள்ள Parking Plots-ல் வாகனங்கள் நிறுத்துவதற்கான மாதாந்திர சந்தா AED 250 முதல் ஆரம்பமாகிறது.

  • 1 மாதம்: AED 250
  • 3 மாதங்கள்: AED 700
  • 6 மாதங்கள்: AED 1,300
  • 12 மாதங்கள்: AED 2,400