2024ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் துபாய் மாநகராட்சி சிறந்த வீட்டுத் தோட்டங்களை தேர்ந்தெடுத்து முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளது.
பசுமையான துபாயை உருவாக்குவதன் ஒரு முயற்சியாக இரண்டாவது ஆண்டாக துபாய் மாநகராட்சி வீட்டு தோட்டத்திற்கான போட்டியை அறிவித்துள்ளது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது சொந்த வீட்டில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் வீட்டிற்கு வெளியே தோட்டம் இருப்பவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
நீர் திறன், பல்லுயிர், மண் ஆரோக்கியம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமையான யோசனைகள் போன்ற 10 அளவுகோல்களின் அடிப்படையில் பத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மதிப்பீட்டிற்கான 10 அடிப்படை அளவுகோல்கள்
- நீர் மேலாண்மை மற்றும் செயல்திறன்
- பல்லுயிர் மற்றும் நாட்டு தாவரங்கள்
- மண் ஆரோக்கியம் மற்றும் கரிம உரமிடுதல்
- கழிவு மேலாண்மை
- ஆற்றல் திறன்/புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Energy Efficiency/Renewable Energy)
- காற்றின் தர மேம்பாட்டிற்கான பங்களிப்பு
- பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மை
- வடிவமைப்பு அழகியல்
- இடங்களின் உகந்த பயன்பாடு
- புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு
பரிசு விவரம்
முதல் இடம் – AED 100,000
இரண்டாவது இடம் – AED 70,000
மூன்றாவது இடம் – AED 40,000
நான்காவது இடம் – AED 20,000
ஐந்தாவது இடம் – AED 20,000
மேலும் இந்த முதல் ஐந்து வெற்றியாளர்கள் AED 10,000 மதிப்புள்ள ரேஃபிள் டிராவில் சேர்க்கப்பட்டு ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.
போட்டியின் காலவரிசை
- போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் தோட்டங்களை நடுவர்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பார்வையிடுவார்கள்.
- வெற்றியாளர்கள் மார்ச் மாதத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் மேலும் விவரம்: https://www.dm.gov.ae/the-most-beautiful-sustainable-home-garden/
