யாசகம் பெற்ற கும்பலை கையும் களவுமாக கைது செய்த துபாய் காவல்துறை!

ஜபமாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பது போல யாசகத்தில் ஈடுபட்ட 41 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து AED 60,000 பணத்தை மீட்டுள்ளது துபாய் காவல்துறை. அரபு நாட்டினரான இந்த நபர்கள், யாசகம் பெறும்  நடவடிக்கைகளுக்கு ஒரு ஹோட்டலை தளமாகப் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அல்-மிஸ்பாஹ்’ எனப்படும் சிறப்பு நடவடிக்கை:

பொது குற்றப் புலனாய்வுத் துறையில் சந்தேக நபர்கள் மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்ட அல்-மிஸ்பா (அரபு மொழியில் “பிரார்த்தனை மணி”) என்ற குறியிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. மேலும் இவர்கள் சுற்றுலா விசாவில் துபாய்க்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிரடி கைது:

ஜபமாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் போது யாசகம்  பெறுவது காணப்பட்டதாக 901 அழைப்பு மையம் மூலம் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கியது. தகவல் கிடைத்ததும், காவல்துறையினர், அந்த இடத்தை கண்காணிக்கத் தொடங்கினர். மேலும் மூன்று அரபு நபர்கள் இந்த பொருட்களை விற்று பொதுமக்களிடம் பணம் கேட்பதைக் கவனித்தனர். பின் அவர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதன் பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அதனடிப்படையில், மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள், ஹோட்டலை விட்டு வெளியேற முயன்ற 10 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

யாசகம் எதிர்ப்பு இயக்கம்” – விழிப்புணர்வு முயற்சி!

இந்த நடவடிக்கை, “யாசகம் பெறாத விழிப்புணர்வு சமூகம்” என்பதை  முன்வைத்து நடைபெறும் “Combat Begging” என்ற காவல்துறையின்   திட்டத்தின் மூலம்:

  • யாசகம் பெறுவது ஒரு குற்றமாக கருதப்படும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுதல்
  • யாசகர்கள் போல் பாவனை காட்டி மத விசுவாசங்களை துஷ்பிரயோகப்படுத்தும் செயலை தடுப்பது
  •  பொதுமக்களிடையே அங்கீகரிக்கப்பட்ட சேவை அமைப்புகள் மூலமாக மட்டுமே தானம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் செயலியில் உள்ள “Police Eye” அம்சத்தைப் பயன்படுத்தி அல்லது  901 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து  அல்லது E-Crime தளம் வழியாக யாசகம் பெறுபவர்கள் குறித்து புகாரளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

TAGGED: