துபாயில் வீட்டு அலங்கார போட்டி; வெற்றி பெறுபவர்களுக்கு AED 100,000 வரை பரிசு!

ரமலானை முன்னிட்டு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் துபாயில் வீட்டை அலங்கரிக்கும் போட்டி நடைபெறுகிறது.  

வீட்டை அலங்கரிக்கும் போட்டி

ரமலான் மாதத்தில் மக்களை உற்சாகமாக வைத்திருக்க பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சியை துபாய் அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வீட்டை அலங்கரிக்கும் போட்டியை துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தின் படைப்புப் பிரிவான பிராண்ட் துபாய் நடத்தியது. இதில் மக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் வீட்டை விதவிதமாக அலங்கரித்தனர். 

AED 100,000 வரை பரிசு:

அதேபோல் நடப்பு ஆண்டும் ரமலானை முன்னிட்டு வீட்டை அலங்கரிக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில்  வெற்றி பெறுபவர்களுக்கு AED 100,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டியில் பங்கேற்பது எப்படி?: 

  • அமீரகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme) 

குடும்ப ஆண்டு (Year of Family) என்பதற்கு ஏற்ப, வீட்டை அழகாக அலங்கரித்து, சுவாரசியமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். 

  • வீடியோவை #Dubai_Best_Decorated_Ramadan_Homes_2026 என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தி, Brand Dubai-ஐ (@branddubai) டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். 
  • வீடியோவை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 11. 

பரிசுத்தொகை 

  • முதல் பரிசு – AED 100,000 
  • இரண்டாம் பரிசு – AED 80,000
  • மூன்றாம் பரிசு – AED 60,000
  • நான்காம் பரிசு – AED 40,000
  • ஐந்தாம் பரிசு – AED 20,000 
  • அடுத்த 10 இடங்கள் – ஒவ்வொன்றுக்கும் AED 10,000 கிடைக்கும்