துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் 20ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நவ.1 முதல் 5 வரை RTA20 என்ற ப்ரோமோ குறியீட்டைப் பயன்படுத்தினால் ராக்ஸி சினிமாஸ் டிக்கெட் மற்றும் Noon ஆர்டர்களுக்கு 20% தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தனது 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகளுக்காக ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் மாபெரும் கொண்டாட்டங்களையும், கவர்ச்சிகரமான சலுகைகளையும் அறிவித்துள்ளது.
பரிசுகள் முதல் தள்ளுபடிகள் வரை, இந்த ஆண்டு விழாவில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்:
சிறப்பு சலுகைகள்:
சினிமா டிக்கெட்டுகள்: நவம்பர் 1 முதல் 5 வரை Roxy Cinemas-ல் ‘RTA20’ என்ற புரோமோ கோடைப் பயன்படுத்தி சினிமா டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி பெறலாம்.
ஆன்லைன் ஆர்டர்கள்: நவம்பர் 1 முதல் 5 வரை Noon தளத்தில் ஆர்டர்கள் செய்யும் போதும் அதே ‘RTA20’ புரோமோ கோடைப் பயன்படுத்தி 20% தள்ளுபடி பெறலாம்.
லிமிடெட் எடிஷன் ‘நோல்’ கார்டுகள்:
RTA-ன் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 30 வரை அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் லிமிடெட் எடிஷன் ‘நோல்’ கார்டுகள் விற்பனைக்கு வரவுள்ளன.
ட்ராம் பயணிகளுக்காக:
அக்டோபர் 22 முதல் நவம்பர் 2 வரை, துபாய் ட்ராமை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், 10,000-க்கும் மேற்பட்ட ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (Buy one Get one) சலுகைகள் கொண்ட Entertainer UAE 2026 Booklet வெல்ல வாய்ப்பு பெறுவர்.
விமான பயணிகளுக்காக:
அக்டோபர் 28 முதல் நவம்பர் 1 வரை துபாய் விமான நிலையத்திற்கு (DXB) வரும் சுற்றுலாப் பயணிகள், RTA நடத்தும் ஃபோட்டோ சேலஞ்ச்-ல் பங்கேற்கலாம். அவர்களுக்குச் சிறப்பான வரவேற்புப் பெட்டி (welcome pack) வழங்கப்படும். அவர்களின் புகைப்படங்கள் RTA-ன் சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மெட்ரோ பயணிகளுக்காக:
நவ.1 முதல் 15 வரை, பர்ஜுமான், யூனியன், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையங்களில் உள்ள ENBD மையங்களுக்குச் (கியோஸ்க்குகளுக்குச்) சென்று, இலவசப் பரிசுகளைப் பெறலாம், மேலும் Go4it கார்டு பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
பேருந்து பயணிகளுக்காக:
நவம்பர் 1 அன்று, அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள RTA20 பூத்-இல் ஒரு சுவாரஸ்யமான சவால் உள்ளது. பூத்துக்குள் சென்று 20 வினாடிகளில் எவ்வளவு பரிசுகளை அள்ள முடியுமோ, அவ்வளவு பரிசுகளை அள்ளிக் கொள்ளலாம். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் சுவையான சாக்லேட்டுகள் வரை இதில் அடக்கம்.
போட்டோ பூத்:
பர்ஜுமான் மெட்ரோ நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜெயிண்ட் பிரேம்கள் கொண்ட ஃபோட்டோபூத்-இல் போஸ் கொடுத்து, டிஜிட்டல் புகைப்பட நகலை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
பலூன்கள் மற்றும் புன்னகைகள் நிகழ்வு:
பர்ஜுமான் மெட்ரோ நிலையம் (காலை 9 மணி), ஆன்-பாசிவ் மெட்ரோ நிலையம், ஷோபா ரியல்டி ட்ராம் நிலையம் (காலை 10 மணி), இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் மற்றும் உம் ரமூல் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் (காலை 11 மணி) ஆகிய இடங்களில் பலூன்கள் மற்றும் புன்னகைகளுடன் கூடிய பிற செயல்பாடுகளை எதிர்பார்க்கலாம்.
