முன்மாதிரியாக செயல்பட்ட 2,172 டாக்ஸி ஓட்டுநர்களை கௌரவித்த RTA!

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ‘சாலை தூதுவர்கள்’ (Road Ambassadors) என்ற திட்டத்தின் கீழ், சிறந்த முறையில் பணிபுரிந்த 2,172 டாக்ஸி ஓட்டுநர்களைக் கௌரவித்துள்ளது.

 2,172  ஓட்டுநர்களுக்கு பாராட்டு:

துபாய்  சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), “சாலை தூதுவர்கள்” (Road Ambassadors) என்ற தனது புதிய திட்டத்தின் கீழ், சேவை, நேர்மை மற்றும் தொழில்முறை கடமைக்கான அங்கீகாரமாக  2,172 டாக்ஸி ஓட்டுநர்களைப் பாராட்டி கௌரவித்துள்ளது.

கௌரவிக்கப்பட்டதற்கான காரணங்கள்:

இந்த அங்கீகாரம், வாகனத்தை சுத்தமாக வைத்திருத்தல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் மற்றும் பயணிகள் தவறவிட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட செயல்களுக்காக வழங்கப்பட்டது.

சேவைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சி:

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது பஹ்ரோசியன் கூறுகையில், “இந்த அங்கீகாரம் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஓட்டுநர்களை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் ஓட்டுநர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, சேவைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது,” என்று கூறினார்.

இது குறித்து ஓட்டுநர்கள், தங்களின் பணிக்குக் கிடைத்த இந்த  அங்கீகாரம், மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். 


 

TAGGED: