ஊழியர்களுக்கு AED 150 மில்லியன் போனஸாக வழங்கிய Sobha குழுமம்

நிறுவன முன்னேற்றத்துக்கு உதவிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் 150 மில்லியன் திர்ஹாமை போனஸாக வழங்கி சிறப்பித்துள்ளது.

SOBHA நிறுவனம் 

துபாயில் முன்னணி தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான SOBHA சமீபத்தில் முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இதற்காக தன் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் குறிப்பாக, டிசம்பர் மாதம் ஊக்கத்தொகை திட்டத்தில் இடம் பெறாத ஊழியர்களுக்காக கொண்டு வரப்பட்டது.

நிறுவனம் கூறியது என்ன?

இந்த தொகை வழங்கப்பட்டது குறித்து அந்நிறுவன தலைவர் ரவி மேனன் கூறுகையில்,போனஸ் என்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்கள் திறமைகள், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பங்களித்த ஊழியர்களுக்கான வெகுமதியையும் நன்றியையும் தெரிவிக்கும் வழியாகும், குறிப்பாக கடந்த ஆண்டில் நிறுவனம் நல்ல மாற்றங்களை அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Bayt ஆய்வு

சமீபத்தில் Bayt.com வெளியிட்ட ஆய்வில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் உள்ள 77 சதவீத பணியாளர்கள் போனஸ் அல்லது கூடுதல் நேர ஊதியம் போன்ற பணப் பலன்களைப் பெறுகின்றனர். இதற்கிடையில், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை ஆதரிக்கும் கொள்கைகளால் பெண்கள் அதிக நன்மை பெறுகிறார்கள்.

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் இந்த நிதி வெகுமதி ஊழியர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.