கோடை நிறைவடைந்து சற்றே குளுமையான காலம் துவங்கிய நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளிப்புற சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், துபாயின் பிரதான சுற்றுலாத் தலங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
துபாய் ஒளிரும் தோட்டம் (GLOW GARDEN)
செப்டம்பர் மாதம் தனது பத்தாவது சீசனை துவங்கிய துபாய் ஒளிரும் தோட்டம், டிக்கெட் கட்டணத்தை சென்ற ஆண்டை விட AED 8.75 உயர்த்தி இவ்வாண்டு AED 78.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் க்ளோ பார்க், டைனோசர் பார்க் மற்றும் ஆர்ட் பார்க் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவு எனவும், அனைவரும் மேஜிக் பார்க் கட்டணமாக தனியே AED 45 + 5% VAT செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிராக்கிள் கார்டன்
சென்ற ஆண்டை ஒப்பிடும் போது மிராக்கிள் கார்டன் டிக்கெட் கட்டணம் சற்றே அதிகரித்துள்ளது.
இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனியேவும், அமீரக குடியிருப்பாளர்களுக்கு தனியேவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு:
குழந்தைகளுக்கு (03 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர்) – AED 85
அதற்கு மேற்பட்டோர் – AED 100
அமீரக குடியிருப்பாளர்களுக்கு:
குழந்தைகள் வயது வந்தோர் அனைவருக்கும் – AED 60
3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்
பட்டாம்பூச்சி தோட்டம் (Butterfly Garden)
குழந்தைகளுக்கு (03 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர்) – AED 55
அதற்கு மேற்பட்டோர் – AED 60
முன்னதாக, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு AED 55 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரக குடியிருபாளர்களுக்கு:
குழந்தைகள் – AED 45, வயது வந்தோர் – AED 50
3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.
துபாய் பார்க்ஸ் & ரெசார்ட்ஸ்
நுழைவாயில் விலை: AED 20 | ஆன்லைன் விலை: AED 15
மோஷன்கேட், லெகோலாண்ட் அல்லது ரியல் மாட்ரிட் வேர்ல்ட் போன்ற இடங்களுக்கு டிக்கெட் வாங்கினால் ரிவர்லேண்ட் நுழைவு இலவசம்.
