துபாய் நகரில் தற்போதுள்ள மழைநீர் வடிகால் அமைப்பை விரிவாக்கம் செய்ய துபாய் நகராட்சி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த புதிய வடிகால் அமைப்பின் மூலம் கடினமான மழைக்காலங்களில் நகரில் நீர் உடனாடியாக வடியும் வண்ணம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழையில், ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழை ஒரே நாளில் கொடித்தீர்த்தது, இவ்வாறு எதிர்பாராத காலநிலைகளை எதிர்கொள்ள துபாய் நகராட்சி இந்த வடிகால் அமைப்பை விரிவாக்கம் செய்யவுள்ளது.
துபாய் மன்னர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஆணைக்கிணங்க ‘Tasreef’ எனும் இத்திட்டத்திற்கு AED 30 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இது நகரின் வடிகால் அமைப்பை 700 சதவீதம் வரை உயர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 எக்ஸ்போ துபாய், சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜபல் அலி பகுதிகளை உள்ளடக்கிய 10.3 கிலோ மீட்டர் வடிகால் குழை போன்று, இது துபாய் முழுக்க அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில் 2033 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் எனவும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் அமைப்பு சிறப்பாக பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tasreef திட்டத்தில் பயன்படுத்தப்படும் குழாய்கள் புவியீர்ப்பு விசையின் அடிப்படையில் மழைநீரை உறிஞ்சும் திறன் கொண்டதாக அமையவுள்ளதென நகராட்சியின் வடிகால் அமைப்பு வல்லுநரான டாக்டர் டாமர் அல் ஹபீஸ் கூறுகிறார்.
இந்த குழாய்கள் மிகப் பெரிய அளவிலான நீரை உறிஞ்சும் திறன் கொண்டாதாகவும், இவை செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் வகையில் அமையவுள்ளன.
