ஜூன் 2 முதல் துபாயில் உள்ள அனைத்து வாகன சோதனை மையங்களை அணுக முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறையை கொண்டுவந்துள்ளது சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA.
அல் குசைஸ் மற்றும் அல் பர்ஷாவில் உள்ள வாகன சோதனை மையங்களில் ஆறு மாத கால சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து துபாயில் உள்ள அனைத்து வாகன சோதனை மையங்களுக்கும் இந்த நடைமுறை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
முன்பதிவு நடைமுறை
வாகன சோதனை மையங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல் குசைஸ் மற்றும் அல் பர்ஷாவில் உள்ள வாகன சோதனை மையங்களில் மட்டும் இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. ஆறு மாத கால சோதனையின் முடிவில் வாடிக்கையார்களின் காத்திருப்பு நேரம் 40% வரை குறைந்துள்ளது என்று தெரியவந்ததை தொடர்ந்து RTA இந்த முடிவை எடுத்துள்ளது. முன்பதிவு செய்யும் நடைமுறையின் மூலம் வாடிக்கையாளர்கள் காத்திருப்பு மற்றும் சேவை நேரம் குறையும் என்று RTA தெரிவிக்கிறது.
27 வாகன சோதனை மையங்கள்
துபாயில் உள்ள 27 வாகன சோதனை மையங்களிலும் முன்பதிவு நடைமுறையை ஜூன் 2 முதல் அமல்படுத்துகிறது. சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA. இதற்கிடையே, இந்த 27 வாகன சோதனை மையங்களில் 19 வாகன சோதனை மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு Walk-In சேவையும் உள்ளது. இருப்பினும், Walk-In சேவைக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக AED 100 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கிடையே 8 வாகன சோதனை மையங்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு உள்ள 8 வாகன சோதனை மையங்கள்
- வாசல் அரேபிய மையம்
- நாட் அல் ஹமர்
- ஷமில் அல் அடித்
- அல் முஹைஸ்னா
- நாட் அல் ஹமர்
- அல் மிசார்
- தஸ்ஜீல் அல் தவார்
- அல் மன்கூல்
எதில் முன்பதிவு செய்வது?
வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த உங்களுக்கு வேண்டிய வாகன சோதனை மையத்தை RTA துபாய் ஸ்மார்ட் செயலி அல்லது வலைத்தளம் www.rta.ae வழியாக முன்பதிவு செய்யலாம். தஸ்ஜீல் ஹட்டா மையத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்வதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
துபாய் முழுவதும் உள்ள 23 ஓட்டுநர் நிறுவனங்களிள் ஒன்றுக்கு நேரடியாக சென்று ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கலாம். இதனை தொடர்ந்து தற்போது துபாய் முழுவதும் 12 இடங்களில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் இயந்திரங்களையும், எப்படி விண்ணப்பிக்கலாம்? என்ற விவரங்களையும், RTA கொண்டுவந்துள்ளது. இப்பொழுது துபாயில் உள்ள அனைத்து வாகன சோதனை மையங்களை அணுக முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறையையும் கொண்டுவந்துள்ளது.
