இயற்கை பேரழிவுகள் மற்றும் எண்ணெய் கசிவுகளை கண்டறியும் அமீரகத்தின் புதிய செயற்கைகோள்

கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து SpaceX’s Falcon 9 ராக்கெட் மூலம் மார்ச் மாதம் அமீரகத்தின் Etihad-SAT விண்ணில் பாய உள்ளதாக முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) அறிவித்துள்ளது.

MBRSC இன் மைல்கல்

Etihad-SAT நாட்டின் முதல் Synthetic Aperture Radar (SAR) செயற்கைக்கோளாக இருக்கும் இது இயற்கை பேரழிவுகளை கண்காணிக்கவும், எண்ணெய் கசிவுகள் போன்ற நடவடிக்கைகளைக் கண்டறியவும் கடல் போக்குவரத்தை  மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயற்கைக்கோளில் உள்ள தொழில்நுட்பம் புவி மைய கண்காணிப்பு திறன், எந்த சூழலிலும் உயர் மட்ட புகைப்படங்கள் எடுக்கும் திறன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நாட்டின் நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்துகிறது.

எப்போது தொடங்கப்பட்டது 

தென் கொரியாவின் Satrec முயற்சியுடன் இணைந்து Etihad-SAT இன் மேம்பாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. MBRSC குழு ஆரம்பத்தில் செயற்கைக்கோளின் விவரக்குறிப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது.

அடுத்த கட்டத்தில், MBRSC பொறியாளர்கள் Satrec நிபுணர்களுடன் இணைந்து இறுதி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தினர்.

செயற்கைக்கோள் குறித்து இளவரசர் கூறியது

இந்த செயற்கைக்கோள் குறித்து துபாய் இளவரசரின் எக்ஸ் தள பதிவில், எந்த வானிலையிலும் பூமியின் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய சக்திவாய்ந்த ரேடார் செயற்கைக்கோளான Etihad-SAT என்ற புதிய விண்வெளி திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் மேம்படுத்தியுள்ளது. இது தென் கொரியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது மற்றும் மார்ச் 2025 இல் தொடங்கப்படும், விண்வெளியில் UAE இன் பெரிய இலக்குகள் மற்றும் இளைஞர்களை வழிநடத்தும் நம்பிக்கையை இது எடுத்து காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரிகள் கூறியது என்ன? 

MBRSC இன் டைரக்டர் ஜெனரல் Salem Humaid Al Marri கூறுகையில், “எத்திஹாட்-SAT Satrec முயற்சியுடன் இணைந்து செயல்பட்டதன் விளைவாகும், இது SAR செயற்கைக்கோள் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற உதவும் புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. அதன் மேம்பட்ட திறன்களுடன், இந்த செயற்கைக்கோள் அமீரகத்தில் உள்ள பல முக்கிய துறைகளை ஆதரிக்கும். மேலும் நிலையான வளர்ச்சிக்கும், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய விண்வெளித் துறையில் நாட்டின் நிலையை மேம்படுத்துவதற்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.

TAGGED: