துபாய் எக்ஸ்போ சிட்டி; புதிய மாஸ்டர் ப்ளான் மூலம் வாகனங்களுக்கு அனுமதி


2022 இல் தொடங்கப்பட்ட போது முதலில் கார் இல்லாத நகரமாக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்போ சிட்டி ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. எக்ஸ்போ சிட்டி துபாய், பாதசாரிகளுக்கு ஏற்ற நகர்ப்புற மையமாக அதன் பார்வையை பராமரிக்கும் அதே வேளையில் கார்களை அனுமதிக்கும் புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர்பிளான் ஒன்றை திட்டமிட்டு வருகிறது. அதன் படி, புதுப்பிக்கப்பட்ட 3.5-சதுர கிலோமீட்டர் தளம் 35,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் 40,000 தொழிலாளர்களுக்கு செழிப்பான தொழில் மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ், சில வாகனங்கள் – குறிப்பாக தனியார் கார்கள், டெலிவரி சேவைகள் மற்றும் அவசரகால வாகனங்கள் – நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அனுமதியை கொண்டிருக்கும். இந்த மாற்றம் எந்த விதத்திலும்  நகரின் நடைபாதை வடிவமைப்பை சீர்குலைக்கவோ அல்லது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவோ அமையாது என அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

என்ன மாற்றங்கள்?

  • துபாய் கண்காட்சி மையத்திற்கு அருகில் AED 1.75 பில்லியன் கலப்பு பயன்பாட்டு மேம்பாடு. (mixed-use development)
  • DP Worldன் உலகளாவிய தலைமையகம் நிறுவப்படுகிறது.
  • துபாய் கண்காட்சி மையத்தின் விரிவாகவும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை அதிகாரி கூறியது என்ன? 

எக்ஸ்போ சிட்டி துபாயின் தலைமை மேம்பாடு மற்றும் டெலிவரி அதிகாரி அஹ்மத் அல் காதிப், வாகன அணுகல் என்பது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, “15 நிமிட நகரத்தை” (15-minute city) உருவாக்குவதற்கு தேவையான ஒன்றாகும். குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட தேவைகளான சுகாதாரம், சில்லறை விற்பனை மற்றும் ஓய்வு ஆகியவற்றை ஒரு குறுகிய நடைப்பயணத்தில் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படா வண்ணம் கவனம் செலுத்தப்படுகிறது. இ-ஸ்கூட்டர்கள் மற்றும் Careem பைக்குகள் போன்ற மென்மையான, குறைந்த-எமிஷன் போக்குவரத்து தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும். எக்ஸ்போ சிட்டி துபாய் மெட்ரோவுடனான நேரடி இணைப்பிலிருந்து பயனடைகிறது, எமிரேட் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நிலையங்களுக்கு தடையற்ற இணைப்புகளை வழங்குகிறது என்றார்.

இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மாஸ்டர்பிளான், துபாயின் பரந்த நகர்ப்புற முன்முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது, துபாய் WALK மாஸ்டர்பிளான் உட்பட, ஆண்டு முழுவதும் பாதசாரிகளுக்கு ஏற்ற நகரமாக இருக்கும்.

சுறுசுறுப்பான இயக்கத்தை ஊக்குவித்து, பயண நேரத்தைக் குறைத்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக இணைப்புகளை வளர்ப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என்று அவர் கூறியுள்ளார்.