அமீரகத்தில் முன்னர் பல லாட்டரிகள் இருந்த நிலையில், பிக் டிக்கெட் (Big Ticket), துபாய் டியூட்டி ப்ரீ லாட்டரி (Dubai Duty Free Lottery), UAE லாட்டரி (UAE lottery) ஆகிய மூன்று ஆபரேட்டர்கள் மட்டுமே லாட்டரி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நடத்த முடியும் என்று பொது வணிக கேமிங் ஒழுங்குமுறை ஆணையம் (GCGRA – General Commercial Gaming Regulatory Authority) தெரிவித்துள்ளது.
பிக் டிக்கெட் (Big Ticket)
‘பிக் டிக்கெட்’ என்பது அபுதாபியில் நடைபெறும் மிகவும் பிரபலமான ஒரு மாதாந்திர லாட்டரி குலுக்கல் ஆகும். இது அபுதாபி ட்யூட்டி ஃப்ரீ (Abu Dhabi Duty Free) என்ற அரசாங்க நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
பரிசுகள்: மிகப்பெரிய ரொக்கப் பரிசுகள் மற்றும் சொகுசு கார்கள் போன்ற பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
டிக்கெட் விலை: ரொக்கப் பரிசுகளுக்கான டிக்கெட்டின் விலை சுமார் AED 500 ஆக இருக்கும். (சலுகைகள் மாறுபடலாம்).
சலுகைகள்: பெரும்பாலும் “இரண்டு டிக்கெட்டுகள் வாங்கினால், ஒன்று இலவசம்” போன்ற சலுகைகள் இருக்கும்.
வாங்கும் முறை: அபுதாபி விமான நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலோ அல்லது பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://bigticket.ae/big-ticket) மூலமாகவோ டிக்கெட்டுகளை வாங்கலாம்.
குலுக்கல்: ஒவ்வொரு மாதமும் குலுக்கல் நடைபெறுகிறது.
இந்த லாட்டரியை அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருப்பவர்களும் வாங்கலாம்.
துபாய் டியூட்டி ப்ரீ லாட்டரி
துபாய் டியூட்டி ப்ரீ லாட்டரியில் பல வகையான குலுக்கல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
1. மில்லினியம் மில்லியனர் (Millennium Millionaire)
இது துபாய் டியூட்டி ப்ரீ லாட்டரியில் மிகவும் பிரபலம்.
பரிசு: 1 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக AED 3,672,500) டிக்கெட் விலை: AED 1,000
வெற்றி வாய்ப்பு: ஒரு குலுக்கலுக்கு 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படுகின்றன.
குலுக்கல்: சில வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.
2. ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் – சொகுசு கார்கள் (Finest Surprise – Luxury Cars)
பரிசு: BMW, Mercedes-Benz, Audi, Range Rover போன்ற சொகுசு கார்கள்.
டிக்கெட் விலை: AED 500
கார்களின் மதிப்பை பொறுத்து, ஒரு குலுக்கலுக்கு 2,000 முதல் 2,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படுகின்றன.
3. ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் – மோட்டார் பைக்குகள் (Finest Surprise – Motorbikes)
பரிசு: உயர் ரக மோட்டார் பைக்குகள் (உதாரணமாக, BMW, Harley-Davidson).
டிக்கெட் விலை: AED 100
ஒரு குலுக்கலுக்கு 1,200 டிக்கெட்டுகள் மட்டுமே.
லாட்டரியில் பங்கேற்பது எப்படி?
துபாய் டூட்டி ஃப்ரீயின் அதிகாரப்பூர்வ இணையதளம் (dubaidutyfree.com) மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) புறப்பாடு, வருகை மற்றும் பொதுப் பகுதிகளில் உள்ள DDF Finest Surprise கவுண்டர்களில் வாங்கலாம்.
தகுதிகள்:
- பங்கேற்பவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
- நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டிக்கெட் வாங்கலாம்.
UAE லாட்டரி (The UAE Lottery)
“The Game LLC” என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி ஆகும். சமீபத்தில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற இளைஞர் UAE லாட்டரியில் AED 100 மில்லியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியப் போட்டி: லக்கி டே (Lucky Day)
கிராண்ட் பரிசு: AED 100 மில்லியன் வரை
விளையாடும் முறை: 1 முதல் 31 வரை 6 எண்களையும், 1 முதல் 12 வரை 1 எண்ணையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குலுக்கல்: இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் நடைபெறும்.
UAE லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து
(https://www.theuaelottery.ae/) லாட்டரி டிக்கெட்களை வாங்கலாம்.
பிற பரிசுகள்: இதில் கட்டாயமாகப் பரிசுகள் வழங்கும் லக்கி சான்ஸ் (Lucky Chance) என்ற குலுக்கலும் உண்டு, இதில் ஒவ்வொரு முறையும் பல வெற்றியாளர்களுக்கு AED 100,000 வழங்கப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி பரிசுகளுக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. வெற்றியாளர் முழுப் பணத்தையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். பொதுவாக, பங்கேற்பவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
