இந்த ஆண்டு (1446 ஹிஜ்ரி) ஹஜ் பருவத்துடன், ஹஜ் மற்றும் கோடைக்காலத்துக்கிடையிலான தொடர்பு நிறைவடைகிறது என சவூதி அரேபியாவின் தேசிய வானிலை மையம் (NCM) அறிவித்துள்ளது. இதன் பின்னர், சில ஆண்டுகளுக்கு ஹஜ் பருவம் கோடைக்காலத்தில் திரும்ப வருவதில்லை.
மிதமான காலநிலையில் ஹஜ்:
சவூதி அரேபியாவின் தேசிய வானிலை மையத்தில் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி அளித்த தகவலின்படி, இவ்வாண்டுடன் கோடைக்காலத்தில் நடைபெறும் ஹஜ் பருவம் முடிவடைந்தது. எதிர்வரும் 25 ஆண்டுகள் வரை ஹஜ் மிதமான மற்றும் குளிர்ந்த காலநிலைகளில் நடைபெறவிருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு பின் கோடையில்:
அதன்படி, அடுத்த எட்டு ஹஜ் பருவங்கள் வசந்த காலத்தில் நடைபெறும். அதன் பின்னர் எட்டு பருவங்கள் குளிர்காலத்திலும், அதற்கடுத்த எட்டு பருவங்கள் இலையுதிர் காலத்திலும் நடைபெறும். பின்னர் வெப்பம் மெல்ல அதிகரித்து கோடை காலத்தில் ஹஜ் நடைபெறும். சுமார் 25 ஆண்டுகள் கழித்துதான் ஹஜ் பருவம் மீண்டும் கோடை காலத்தில் நடைபெறும்.
இந்த மாற்றம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் சுழற்சி காரணமாக ஏற்படுகிறது. இந்த சுழற்சி வருடந்தோறும் ஹஜ் பருவத்தை மாற்றுகிறது. இதனால், எதிர்கால ஹஜ் யாத்ரீகர்கள் அதிக வெப்பத்திற்குப் பதிலாக, வசதியான மற்றும் மிதமான வானிலை சூழ்நிலையில் ஹஜ் கடமைகளைச் செய்யும் வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த மாற்றம், அதிக வெப்பம் காரணமாக சவூதியில் ஏற்படும் சிரமங்களை குறைத்து, யாத்ரீகர்களுக்கான அனுபவத்தை இலகுவாக்கும் வகையில் அமையும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.