வானில் தோன்றவிருக்கும் ஹண்டர் சூப்பர் மூன்; அமீரகத்தில் எங்கெல்லாம் பார்க்கலாம்?

ஹண்டர் சூப்பர் மூன் எனப்படும் இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் அக்டோபர் 9 அன்று வானில் தென்படும் என துபாய் வானியல் குழுமம் தெரிவித்துள்ளது.

முதல் சூப்பர் மூன்:

ஹண்டர் சூப்பர் மூன் (Hunter Super Moon) எனப்படும் இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் அக்டோபர் 9, வியாழக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரக வானில் தெரியவிருக்கிறது. இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வரும் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகளில் இது முதலாவதாகும்.

மற்ற பௌர்ணமி நாட்களை விட ஹண்டர் நிலவு 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக வெளிச்சத்தோடும் தெரியும். இதற்குக் காரணம், நிலவு அதன் நீள்வட்ட பாதையில் பூமிக்கு  மிக அருகில் வரும். இந்தப் புள்ளிக்கு பெரிஜி (Perigee) என்று பெயர்.

சூப்பர் மூனைக் காணச் சிறந்த இடங்கள்:

துபாய் வானியல் குழு (Dubai Astronomy Group) துபாய் பல்கலைக்கழகத்தில் (University of Dubai) இதைப் பார்க்க ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கே தொலைநோக்கிக் கருவி மூலம் பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் சில இடங்களில் சூப்பர் மூனை காணலாம். 

  • அல் பர்ஷா குளம் பூங்கா (Al Barsha Pond Park): இது இரவு 11:30 மணி வரை திறந்திருக்கும்.
  • அல் குத்ரா ஏரிகள் (Al Qudra Lakes)
  • ஹட்டா (Hatta)
  • ஜெபல் அலி கடற்கரை (Jebel Ali Beach) 
  • கைட் கடற்கரை (Kite Beach) இரவு 12 மணி வரை திறந்திருக்கும், உணவகங்களும் உள்ளன.
  • தி வியூயிங் பாயிண்ட் (The Viewing Point)
  • அல் குவா பால்வீதி இடம் (Al Quaa Milky Way Spot – அபுதாபி)

2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் தென்பட உள்ளது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வானில் ரத்த நிலவு எனப்படும் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதை காண்பதற்கு துபாய் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: