அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட மகளிர் T20 உலகக்கோப்பை:-

வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த, ஒன்பதாவது ICC மகளிர் T20 உலகக்கோப்பை, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது, இதன் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேறவும், வங்கதேசத்திற்கு பயணத்தை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டன.

எனவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தத் தொடரை அமீரகம், இலங்கை அல்லது சிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கு நடத்த திட்டமிடப்பட்டு, இறுதியாக அமீரகம் முடிவு செய்யப்பட்டது.

இந்த நகர்வு குறித்து, ICC-யின் தலைமை நிர்வாகி Geoff Allardice வெளியிட்ட செய்தி குறிப்பில், உலகக்கோப்பையை அந்நாட்டில் நடத்த அனைத்து வழியிலும் முழு முயற்சியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஈடுபட்ட பின்பும் நம்மால் அங்கு நடத்த முடியாமல் போனதை வெட்கக் கேடான விஷயமாகவே பார்க்கிறோம். 

இறுதியாக, உலகக்கோப்பையை நடத்த முன்வந்த அமீரக கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்  கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மகளிர் உலகக்கோப்பையானது, வருகின்ற இன்று (அக்டோபர் 03) முதல் 20 வரை அமீரகத்தின் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.