அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) 4 புதிய விசிட் விசாக்களை வெளியிட்டுள்ளது.
அமீரகத்திற்கு வரும் AI நிபுணர்கள், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வருபவர்கள், நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்கள் மற்றும் படகில் சுற்றுலா வருபவர்களுக்கு விசிட் விசாக்களை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) அறிமுகம் செய்துள்ளது.
இந்த 4 புதிய விசிட் விசாக்கள் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு சுற்றுலாத் துறைகளில் திறமை, நிபுணத்துவம் மற்றும் தொழில்முனைவோரை ஈர்ப்பதற்கான அமீரகத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது.
நான்கு புதிய விசிட் விசாக்கள்
AI நிபுணர்களுக்கு
இந்த வகை விசாவைப் பெறுவதற்குத் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசா குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அல்லது பலமுறை நுழைவு அனுமதியை வழங்கும்.
பொழுதுபோக்குக்காக
பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக தற்காலிகமாக வரும் வெளிநாட்டினருக்கு இந்த வகை விசா வழங்கப்படும்.
நிகழ்வுகளுக்கு
திருவிழா, கண்காட்சி, மாநாடு, கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இந்த விசா மூலம் தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.
ஸ்பான்சர் அல்லது ஹோஸ்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்தக் கடிதத்தில் நிகழ்வின் விவரங்கள் மற்றும் அதன் கால அளவு உட்பட விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலாவிற்கு
பயணக் கப்பல்கள் மற்றும் ஓய்வு படகுகள் (Leisure Boats) மூலம் அமீரகத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு தற்காலிகமாக பலமுறை அனுமதி வழங்கப்படும் இந்த விசாவை பெற ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் வழங்கிய கடிதத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
