உலகளாவிய விமான போக்குவரத்து அமைப்பான ICAO-வின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான புகைப்படத்திற்கு புதிய விதிகளை அமைத்துள்ளது.
துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான புகைப்படத்திற்கு புதிய விதிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து துபாயில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை இந்தியக் குடியிருப்பாளர்களுக்கு வெளியிட்டது. அதன்படி இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ICAO தரநிலைகளை பூர்த்தி செய்யும் புகைப்படங்களை சமர்ப்பித்தால் மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்ப புகைப்படங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்
பாஸ்போர்ட் சேவைகளுக்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டிய CAO தரநிலைகளின்படி பின்பற்ற வேண்டிய புகைப்பட வழிகாட்டுதல்கள் இங்கே.
- புகைப்படத்தில் 80-85% வரை முகம் தெரிய வேண்டும். தலை மற்றும் தோள்கள் நெருக்கமாக இருக்க வேண்டும்.
- வண்ண புகைப்படம் 630×810 பிக்சல்கள் என்ற பரிமாணத்தில் இருக்க வேண்டும்.
- புகைப்படங்கள் கணினி மென்பொருளால் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.
- புகைப்படத்தின் பேக்ரவுண்ட் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.
- புகைப்படத்தில் இருக்கும் நபர் நேராக கேமராவைப் பார்க்க வேண்டும்.
- சரும நிறம் இயற்கையாக இருக்க வேண்டும்.
- கண்களைத் திறந்து தெளிவாக தெளிவாகத் தெரியும்படி புகைப்படத்தில் தோன்ற வேண்டும்.
- கண்களுக்குக் குறுக்கே இமை முடிகள் மறைக்கக்கூடாது.
- சீரான வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கப்பட வேண்டும் மற்றும் நிழல்கள் அல்லது ஃபிளாஷ் லைட் தெரியக் கூடாது
- முகத்தில் பிரதிபலிப்புகள் மற்றும் சிவந்த கண்கள் இருக்கக்கூடாது.
- கேமராவிலிருந்து 1.5 மீட்டர் தூரத்திலிருந்து புகைப்படம் எடுக்கப்பட வேண்டும் (மிகவும் நெருக்கமாக இருக்கக் கூடாது)
- புகைப்படம் மங்கலாக இருக்கக்கூடாது.
- முழு முகமும் முன்பக்கமாக கண்கள் திறந்தபடி இருக்க வேண்டும்.
- தலை முடியில் இருந்து தாடை வரை முகம் முழுவதும் தெரிய வேண்டும்.
- முகம் நேராக இருக்க வேண்டும் (தலை சாய்ந்திருக்கக் கூடாது)
- முகத்திலோ அல்லது பேக்ரவுண்டிலோ கவனத்தை சிதறடிக்கும் நிழல்கள் எதுவும் இருக்கக்கூடாது.
- வெளிச்சத்தினால் ஏற்படும் சிவப்பு கண் விளைவுகளையோ அல்லது கண்களின் தெரிவுநிலையைக் குறைக்கும் பிற விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.
- மத காரணங்களுக்காக தவிர, தலையை மூடுவது அனுமதிக்கப்படாது. ஆனால் தாடையின் அடிப்பகுதியில் இருந்து நெற்றியின் மேல் பகுதி வரை முக அம்சங்கள் மற்றும் முகத்தின் இரு விளிம்புகளும் தெளிவாக தெரிய வேண்டும்.
- முக பாவனை இயற்கையாக இருக்க வேண்டும்.
