அபுதாபியில் இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்; அமீரக அமைச்சருடன் ஆலோசனை, ADIPEC-ல் இந்திய பெவிலியன் திறப்பு!

அபுதாபிக்கு சென்றுள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்கள், அங்கு அமீரக அமைச்சருடன் முக்கிய ஆலோசனை, ADIPEC மாநாட்டில் இந்திய பெவிலியனை திறந்து வைத்தது, OPEC பொதுச் செயலாளருடன் ஆலோசனை, BAPS இந்து மந்திர் ஆலயத்திற்கு சென்றது போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அமீரக அமைச்சருடன் ஆலோசனை:

அமீரக எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு HE சுஹைல் முகமது அல் மஸ்ரூயி அவர்களுடன் திரு  ஹர்தீப் சிங் பூரி நேரில் ஆலோசனை நடத்தினார். இதில் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் எரிசக்தி துறையில் இந்தியா அமீரக உறவுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது .

OPEC பொதுச் செயலாளருடன் ஆலோசனை:

OPEC பொது செயலாளர் HE ஹைதம் அல்-கைஸ் அவர்களுடன் நிகழ்ந்த  சந்திப்பிற்க்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது அன்பு நண்பர் HE சுஹைல் முகமது அல் மஸ்ரூயி, அவர்களுடன் உலகளவில் OPEC-இன் 3 வது பெரிய இறக்குமதியாளரான இந்தியா, முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் குழுவானது ஒரு தனித்துவமான மற்றும் கூட்டுவாழ்வு உறவைக் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வேர்ல்ட் ஆயில் அவுட்லுக்கின் 18வது பதிப்பிற்காக எனது நண்பர் மற்றும் ஒபெக் குழு முழுவதையும் வாழ்த்துகிறேன், இதன் கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி சந்தைகளில் பங்களிப்பாளராக இந்தியா அனுபவிக்கும் முக்கிய நிலைகள் குறித்து பேசப்பட்டது  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADIPEC மாநாட்டில் இந்திய பெவிலியன் திறப்பு:

உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடான அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி (ADIPEC) நவம்பர் 04 முதல் நவம்பர் 07 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) பெவிலியனை திறந்து வைத்தார். இந்த பெவிலியனில் 50-க்கும் மேற்பட்ட இந்திய கண்காட்சியாளர்கள் இடம்பெற்று மிகப்பெரிய பெவிலியனாக அமைந்துள்ளது.

இந்த அரங்கை  இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பு (FIPI) ஏற்பாடு செய்திருந்தது. (Innovate to Illuminate: India’s Energy Future) என்ற கருப்பொருளின் மூலம் நாட்டின் விரிவான ஆற்றல் பார்வையை இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், இங்கு ONGC, IOCL, BPCL, HPCL, OIL, GAIL, மற்றும் Engineers India Limited (EIL) முன்னணி இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வசதிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

BAPS இந்து மந்திர் ஆலயத்திற்கு வருகை: 

அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் ஆலயத்திற்கு வருகை புரிந்த அமைச்சர், அவ்வாலயத்தின் கலை நயத்தையும் பார்வையிட்டு, சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் ஜி அவர்களை சந்தித்து தனது வணக்கத்தையும் நன்றிகளையும் பகிர்ந்து கொண்டார்.

2021 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் அமைந்துள்ள முதல் பாரம்பரிய இந்து கோவிலில் பூஜை நடத்தி ஒரு சிரமட்டையை வைத்து நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். தற்போது இந்த கோவில் பழங்கால இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆழமாக ஆதரிக்கப்பட்ட அமைதியான இணக்கம் போன்ற மதிப்புகளின் காவலராக உயர்ந்து நிற்கிறது என்று தனது X பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.