தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வரும் அக்.20 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸில் (Dubai Parks & Resorts) இருக்கும் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களைச் சலுகை விலையில் கண்டு மகிழலாம்.
இங்கே பலவிதமான ரைடுகள் (Rides), பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மற்றும் ஷாப்பிங் சலுகைகள் உள்ளன. அக்டோபர் 17 முதல் 19-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் இந்தச் சலுகை மூலம், இந்தியர்கள் வெறும் AED 99 முதல் பூங்காக்களைச் சுற்றிப் பார்க்கலாம்.
சலுகை விவரங்கள்:
AED 99 Pick-a-Park: ஒரு நபருக்கு AED 99 செலுத்தி, ஒரு பூங்காவிற்கு செல்லலாம். இது வழக்கமான விலையில் இருந்து சுமார் 70 சதவீதம் தள்ளுபடிக்கு சமம்.
AED 149 Pick-2-Parks: ஒரு நபருக்கு AED 149 செலுத்தி, இரண்டு பூங்காக்களை பார்க்கும் வாய்ப்பை பெறலாம்.
இந்தச் சலுகை மூலம் MOTIONGATE Dubai, Real Madrid World, LEGOLAND Dubai அல்லது LEGOLAND Water Park ஆகிய பூங்காக்களுக்கு செல்லலாம்.
டிக்கெட்டுகளைப் பெறுவது எப்படி?
இந்தச் சிறப்பு டிக்கெட்டுகளை துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dubaiparksandresorts.com மூலம் வாங்கலாம்.
முக்கிய நிபந்தனைகள்
- இந்தச் சிறப்புச் சலுகை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களுக்கு (3 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மட்டுமே.
- நுழையும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி Emirates ID-ஐ கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
- இந்தியர் அல்லாதவர்கள் நுழைவுக்கு முழு விலை டிக்கெட்டை வாங்க வேண்டும்.
- இந்தியர் அல்லாதவர்கள் ஆன்லைனில் இந்தச் சிறப்பு டிக்கெட்டை வாங்கியிருந்தால், பூங்காவின் நுழைவு வாயிலில் முழு விலை டிக்கெட்டை வாங்க வேண்டியிருக்கும்.
- டிக்கெட்டுகள் நீங்கள் தேர்ந்தெடுத்த பூங்காக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
