ஐபிஎல் 2025; மெகா ஏலத்தை முன்னிட்டு தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக் கொண்ட அணிகள், முழு லிஸ்ட்…

2025 சம்மரில் துவங்கவுள்ள ஐபிஎல் 18-வது சீசனுக்காக மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது, இதற்காக பத்து அணிகளும் தங்கள் வியூகங்களுக்கு ஏற்றவாறு வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.

மேலும், இந்த மெகா ஏலத்திற்காக ஒவ்வொரு அணிக்கும் தலா 120 கோடியை ஐபிஎல் நிர்வாகம் ஒதுக்கியது. தக்கவைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணி ஆறு வீரர்கள் வரை தக்கவைத்து கொள்ளலாம் அல்லது தக்கவைத்தது போக மீதம் உள்ள வீரர்களை RTM பயன்படுத்தி ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

தலைவரு நிரந்தரம், மீண்டும் களம் காணும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐந்து வீரர்களை தக்க வைத்து கொண்டது. அதில் அன்கேப் வீரர் என்ற பெயரில் தோனி தக்கவைகப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை அணி, 55 கோடி மற்றும் 1 RTM வாய்ப்புடன் ஏலத்தில் களம் இறங்குகிறது. 

  • ருத்துராஜ் கெய்க்வாட் – 18 CR
  • ரவீந்திர ஜடேஜா – 18 CR
  • மதீசா பத்திரானா – 13 CR
  • சிவம் துபே – 12 CR
  • எம்.எஸ்.தோனி – 4 CR

அதிக தொகை பெற்ற இந்திய வீரர் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்த வரை, விராட் கோலி மற்றும் இரண்டு இளம் இந்திய வீரர்களை தக்க வைத்து 83 கோடி மற்றும் 3 RTM வாய்புகளுடன் ஏலத்திற்கு தயாராகவுள்ளனர்.

  • விராட் கோலி – 21 CR
  • ரஜத் படிதார் -11 CR
  • யாஷ் தயல் – 5 CR

இந்தியப் படையுடன் மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்து இந்திய வீரர்களை தக்க வைத்துள்ளது, இதன் மூலம் ரூபாய் 45 கோடி மற்றும் 1 RTM வாய்ப்புடன் அந்த அணி ஏலத்திற்கு செல்கிறது. 

  • ஜாஸ்பிரித் பும்ரா- 18 CR
  • சூர்யகுமார் – 16.35 CR
  • ஹர்திக் பாண்டியா –  16.35 CR
  • ரோஹித் ஷர்மா – 16.3௦ CR
  • திலக் வர்மா –  08 CR

பண்ட் இல்லாத டெல்லி

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டு இந்திய ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு இளம் வீர்கள் என நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது, இருப்பினும் பண்ட் இல்லாதது ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் அந்த அணி ரூபாய் 73 கோடி மற்றும் 2 RTM வாய்ப்புகளுடன் ஏலம் செல்கிறது.

  • அக்சர் படேல்- 16.50 CR
  • குல்தீப் யாதவ்- 13.25 CR
  • ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்- 10 CR
  • அபிஷேக் போரேல்- 4 CR

கேப்டனை கைவிட்ட கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஏலத்திற்காக ஆறு வீரர்களை தக்க வைத்துள்ளது, சென்ற ஆண்டு அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர் இதில் இல்லாதது கொல்கத்தா ரசிகர்களுக்கு வறுத்தமலிப்பதாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த அணி ரூபாய் 51 கோடி மற்றும் RTM வாய்ப்பு எதுவும் இன்றி ஏலம் செல்கிறது.

  • ரிங்கு சிங்- 13 CR
  • ஆண்ட்ரே ரசல்- 12 CR 
  • சுனில் நரைன்- 12 CR
  • வருன் சக்ரவர்த்தி- 12 CR
  • ரமன்தீப் சிங்- 4 CR
  • ஹர்ஷித் ரானா- 4 CR

இளம் படையோடு குஜராத்

குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இந்த அணி ரூபாய் 69 கோடி மற்றும் 1 RTM வாய்ப்புடன் ஏலம் செல்கிறது.

  • ரசித் கான்- 18 CR
  • சுப்மன் கில்- 16.5 CR
  • சாய் சுதர்சன்- 8.5 CR
  • ஷாருக் கான்- 4 CR
  • ராகுல் திவாட்டியா- 4 CR

தனது படையை தக்க வைத்த ராஜஸ்தான் 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களுக்கான ஆறு வீரர்களையும் தக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்த அணி ரூபாய் 41 கோடி மற்றும் RTM வாய்ப்பு எதுவும் இன்றி ஏலம் செல்கிறது.

  • சஞ்சு சாம்சன் – 18 CR
  • ஜெய்ஸ்வால்- 18 CR
  • ரியான் பராக்- 14 CR
  • துருவ் ஜுரேல்- 14 CR
  • ஹெட்மயர்- 11 CR 
  • சந்தீப் ஷர்மா- 4 CR

வெளிநாட்டு வீரர்களுடன் ஹைதரபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் தக்க வைத்த ஐந்து வீரர்களுள் மூன்று பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இதன் மூலம் இந்த அணி ரூபாய் 45 கோடி மற்றும் 1 RTM வாய்ப்புடன் ஏலம் செல்கிறது.

  • ஹென்ரிச் க்லாசன்- 23 CR
  • கம்மின்ஸ்- 18 CR 
  • அபிஷேக் ஷர்மா- 14 CR
  • ட்ராவிஸ் ஹெட்- 14 CR
  • நிதிஷ் ரெட்டி- 8 CR

இரண்டே வீரர்களுடன்பஞ்சாப்

பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்த அணி ரூபாய் 110  கோடி மற்றும் 4 RTM வாய்ப்புகளுடன் ஏலம் செல்கிறது.

  • ஷஷான்ங்க் சிங்- 5.5 CR
  • பிரப்சிம்ரன் சிங்- 4 CR

ராகுல் இல்லாத லக்னோ

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது, இதன் மூலம் இந்த அணி ரூபாய் 69 கோடி மற்றும் 1 RTM வாய்ப்புடன் ஏலம் செல்கிறது.

  • நிகோலஸ் பூரான்- 21 CR
  • மயங்க் யாதவ்- 11 CR
  • ரவி பிஷ்னோய்- 11 CR
  • ஆயுஷ் பதோனி- 4 CR 
  • மோசின் கான்- 4 CR