துபாயில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

கமல் ஹாசனின் தக் லைஃப் படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், துபாயில் ஜூன் 1 அன்று  பட புரோமோஷன், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 2 அன்று  சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களில் தயாரிப்பில்,  நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், த்ரீஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப்.

மணி ரத்னம் – கமல் ஹாசன் காம்போ!

நாயகன் படத்திற்கு பின் 38 வருடங்களுக்குப் பின் இயக்குநர் மணி ரத்னம் – கமல் ஹாசன் இருவரும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் முதல் முறையாக இப்படத்தில் கமலுடன் சிம்பு நடித்துள்ளார்.

பல்வேறு நகரங்களில் பட புரோமோஷன்:

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பட புரோமோஷனிற்காக உலகின் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

துபாயில் ஜூன் 1 அன்று மாலை 5 மணிக்கு டெய்ரா சிட்டி சென்டரில் வோக்ஸ் சினிமாஸில்  தக் லைஃப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதில் நடிகர்கள் கமல் ஹாசன், த்ரீஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு, ரசிகர்களிடையே உரையாற்றினர்.  இந்நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசமாக வழங்கப்பட்டதால், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 Meet and Greet

துபாயில் ஜூன் 1 அன்று  சிலிக்கான் சென்ட்ரல் மாலில் பட புரோமோஷன் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம் இன்டர்நேஷனல்  வழங்கியது. மாலை 6 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல் ஹாசன், த்ரீஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு, ரசிகர்களிடையே உரையாற்றினர்.

பத்திரிக்கையாளர்காள் சந்திப்பு!

ஜூன் 2 அன்று துபாயில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அமீரகத்தில் உள்ள தமிழ், மலையாள ஊடகங்களின் பத்திரிக்கையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நட்சத்திரங்கள் பதிலளித்தனர்.

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நட்சத்திரங்கள் பதிலளித்தனர்.
அப்போது கமல் ஹாசன் பேசும் போது, உலகத்தரத்துக்கு தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும் நகர்வதற்கு ஊடகவியலாளர்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றும்.  சினிமாவை நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இப்படம் முழுக்க தக் ஸ்டைலில் இருக்குமா? என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, ”இப்படத்தின் மூலம் தக் என்பதற்கு புது அர்த்தம் கிடைக்கும். செல்லமாக, ஸ்மார்ட்டாக, அறிவாளியாக இருப்பவரை தக் லைஃப் என்று கூறலாம்” என நடிகர் கமல் ஹாசன் பதிலளித்தார்.


TAGGED: