அமீரகம், சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஆன் அரைவல் முறையில் 6 மாத காலம் செல்லுபடியாகும் சுற்றுலா விசா வழங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு ஆன் அரைவல் விசா
குவைத்தில் தற்போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC – Gulf Cooperation Council உறுப்புநாடுகளில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள அனைத்து நபர்களும் ஆன் அரைவல் விசா (On Arrival Visa) பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியை குவைத்தின் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஃபஹத் அல்-யூசுப் அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதிகாரப்பூர்வ கஸெட் குவைத் அல்-யூம் பத்திரிகையில் வெளியிடப்பட்டதும், விதி உடனடியாக அமலுக்கு வந்தது.
யார் பயன்பெறலாம்?
இந்த வசதி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய GCC உறுப்புநாடுகளில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள அனைத்து வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும். விண்ணப்பதாரரின் குடியிருப்பு அனுமதி குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாக இருக்க வேண்டும்.
பழைய விதிகள் ரத்து
2008ஆம் ஆண்டு அறிமுகமான பழைய விதிகளின்படி, மருத்துவர், பொறியாளர், நீதிபதி, நிர்வாக அதிகாரி போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மட்டுமே ஆன் அரைவல் விசா வழங்கப்பட்டு வந்தது. புதிய விதி, அந்த வரம்புகளை நீக்கி, அனைத்து வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கும் இந்த சலுகையை விரிவுபடுத்துகிறது.
விசா பெறும் நடைமுறை
பயணிகள் குவைத்தின் விமான நிலையம் அல்லது துறைமுகம் ஆகிய நாட்டின் நுழைவுவாயில்களில் நேரடியாக சுற்றுலா விசா பெற முடியும். குடியுரிமை அதிகாரிகள், விண்ணப்பதாரரின் குடியிருப்பு அனுமதி மற்றும் அதன் செல்லுபடியாகும் காலத்தைச் சரிப்பார்த்த பின் விசா வழங்கப்படும்.
இந்த புதிய நடவடிக்கை, GCC நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு பயணத்தை எளிதாக்குவதோடு, பிராந்திய நாடுகளின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நடவடிக்கை, GCC நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு பயணத்தை எளிதாக்குவதோடு, பிராந்திய நாடுகளின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
